விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார் காலத்து எழுகின்ற*  கார்முகில்காள்!*  வேங்கடத்துப்- 
  போர் காலத்து எழுந்தருளிப்*  பொருதவனார் பேர் சொல்லி* 
  நீர் காலத்து எருக்கின்*  அம்பழ இலை போல் வீழ்வேனை* 
  வார் காலத்து ஒருநாள்*  தம் வாசகம் தந்தருளாரே *.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கார் காலத்து - வர்ஷகாலத்திலே
வேங்கடத்து எழுகின்ற - திருமலையிலே வந்து தோற்றாநின்ற
கார்முகில்காள் - காள மேகங்களே!,
போர்காலத்து - யுத்தஸமயத்திலே
எழுந்தருளி - (போர்களத்தில்) எழுந்தருளி

விளக்க உரை

வர்ஷாகாலத்திலே தவறாமல் வந்துசேருகிறேன் என்று சொல்லிப்போன பெருமான் வாராதொழிந்தாலும் அவனுடைய வடிவுக்குப் போலியான நீங்களாவது வந்துதோன்ற நின்றீர்களே! என்ற உகவைதோன்றக் கார்காலத்தெழுதாலும் நாம் திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டாவது ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்து அடியார்கட்காகக் காரியம் செய்வதையே தொழிலாகக்கொண்டு விரொதிநிரஸநத்தில் உத்ஸாஹங்கொண்டு கிளருமவனான சக்ரவர்த்தி திருமகனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ண ஆரம்பித்தேன்; அதுவே காரணமாக உடனே ஸைதில்யமடைந்தேன்; மழைகாலத்தில் எருக்கம பழுப்புகள் அற்றற்று விழுவதுபோல் ஒசித்து தளர்ந்து தளர்ந்து விழும்படியான நிலைமையில் நின்றேன், இவ்வளவிலும் அப்பெருமான் எனக்கு அருள்செய்ய நினைத்திலன், என் வாழ்நாளெல்லாம் இப்படி துக்கமயமாகவேயோ கழியப்போகிறது? ஒருநாளாகிலும் ஒருவாய்ச்சொல் சொல்லி யனுப்பவும் மாட்டாரோ? என்கிறாள்.

English Translation

O Dark monsoon clouds, I sing the praise of the Venkatam Lord, who entered the battlefield and emerged victorious. I fall apart like withered Caltrops milkweed leaves in the rain. Alas, will he never send a word of hope?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்