விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சங்க மா கடல் கடைந்தான்*  தண் முகில்காள்!* வேங்கடத்துச்- 
    செங்கண் மால் சேவடிக் கீழ்*  அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 
    கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து* 
    ஒருநாள் தங்குமேல் என் ஆவி*  தங்கும் என்று உரையீரே* (2)       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கம் - சங்குகளை யுடைத்தாயும் பெருமைவாய்ந்தது
மா - மான
கடல் - கடலை
கடைந்தான் - கடைந்தருளின பெருமான் எழுந்தருளியிருக்கிற
வேங்கடத்து - திருமலையில் திரிகிற
விண்ணப்பம் - விஜ்ஞாபாம் (யாதெனில்
 

விளக்க உரை

தன்னை ஸ்ரம்ப்படுத்திப் பிறர் காரியமே கருத்தாகச் செய்து போருகிற எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்தில் வாழ்கிறவுங்களுக்கு அவனுடைய குணம் படிய வேண்டாவா? என்கை ஸம்போதனத்தின் உட்கருத்து நீங்கள் திருவேங்கடமுடையானது திருவடவாரத்திலே அடியேனுடைய ஒரு விண்ணப்பத்தைச் சொல்லவேணும், விண்ணப்பம் செய்யும் பாசுரமென்னென்னில், “கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்கு மேல் என்னாவிதங்கும்“ என்று சொல்லுங்கோள். அவர் என்னோடு கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத்தடங்களிலே குங்குமக்குழம்பு பூசி அலங்கரித்து வைத்திருக்கிறேன், அது ப்ரயோஜநமுடையதாம்படி பண்ணுவாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கோள் என்கிறாள், அணையவமுக்கிக் கட்டுகையாகிற (***) கடாஸ்லேஷத்தில் உள்ள விருப்பத்தை உணர்த்துகிறபடி. குங்குமத்தின் குழம்பு - குங்குமப்பூவை மர்த்தித்துக் குழம்பாக்கிப் பூசின் பூச்சு.

English Translation

O Dark clouds go to Venkatam, to the Lord who churned the ocean. Fall at his lotus-feet and deliver this message; if only he will give this serf of his the bliss of union one day, erasing off the Kumkuma smeared on her breasts, she may live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்