விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடலிற் பிறந்து*  கருதாது*  பஞ்சசனன் 
  உடலில் வளர்ந்துபோய்*  ஊழியான் கைத்தலத்* 
  திடரிற் குடியேறி*  தீய அசுரர்* 
  நடலைப் பட முழங்கும்*  தோற்றத்தாய் நற் சங்கே!*    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல் சங்கே - அழகியசங்கே!
கடலில் - ஸமுத்திரத்திலே
பிறந்து - பிறந்து (அங்குநின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து - பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற்போய் வளர்ந்து,
கருதாது - (இப்படி பிறந்தவிடத்தையும் வளர்ந்தவிடத்தையும்) நினையாமல்

விளக்க உரை

சங்கே! நீ பிறந்ததெங்கே? போய்வளர்ந்ததெங்கே?, உப்புக்கடலிலேபிறந்து அசுரனுடைய உடலுக்குள்ளே போய்வளர்ந்தாய், இப்படி மட்டமான குலத்திலே பிறந்து வளர்ந்தவுனக்கு எம்பெருமானுடைய திருக்கைத்தலத்திலே நித்யவாஸம்பண்ணப்பெறுதலும், அவனுடைய திருவாயிலேயிருந்துகொண்டு அஸுரராக்ஷஸாதிகள் குடல்குழம்பும்படி கோஷம் செய்யப்பெறுதலும் வாய்ந்தது என்ன பாக்கியம்!, உன் வைலக்ஷண்யத்தை என் சொல்வேன்? என்கிறாள். கருதாது என்ற எதிர்மறை வினையெச்சம், குடியேறி என்றதில் அந்வயித்து, பிறந்தவிடத்தையும் வளர்ந்தவிடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து எப்போதும் எம்பெருமானது திருக்கைத் தலத்திலேயே குடிவாழ்ந்து என்று பொருள் தரும். இனி, “கருதாது பஞ்சசன னுடலில் வளர்ந்து“ என உள்ளபடியே அந்வயித்தலுமாம். பஞசசன்னுடைய அஸுரத்தன்மையை (எம்பெருமானிடத்துப் பகைமைபூண்டவன் என்னுமிடத்தை) ப்பாராமல் அவனது உடலில் வளர்ந்து என்றபடி. ஊழியான் - என்றும் அழிவின்றி நெடுங்காலம் வாழ்பவன், யுகம்முடிந்த காலத்தும் தான்நின்று அனைவரையும் நோக்குமவன், காலத்துக்கு நிர்வாஹன் - எனப் பலபொருள்களுண்டு, எம்பெருமானுக்கு வாசகம். “கைத்தலத்திடர்“ - திடர் - உயர்ந்தஸ்தானம். நடலைப்படுதல் - துன்பமடைதலும் நடுக்கமடைதலும், “ஸகோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநிவ்யதாரயத்“ என்ற கீதை இங்கு நினைக்கத்தக்கது தோற்றம் - மேன்மை.

English Translation

Good for you, O Conch! Though you are born of the lowly ocean and brought up in Panchajana’s filthy body, you have risen high. Held in the Lord’s left hand, you strike fear among the wicked Asuras with your booming sound.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்