விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கருப்பூரம் நாறுமோ?* கமலப் பூ நாறுமோ* 
  திருப் பவளச் செவ்வாய்தான்*  தித்தித்திருக்குமோ* 
  மருப்பு ஒசித்த மாதவன் தன்*  வாய்ச்சுவையும் நாற்றமும்* 
  விருப்புற்றுக் கேட்கின்றேன்*  சொல் ஆழி வெண்சங்கே!* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி வெண்சங்கை - கம்பீரமாய் வெளுத்திராநின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன்தன் - (குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ணபிரானுடைய
வாய் - திருஅதரத்தினுடைய
சுவையும் - ரஸத்தையும்
நாற்றமும் - பரிமளத்தையும்

விளக்க உரை

கம்பீரமான ஹ்ருதயத்தையும் பரமசுத்தஸ்வபாவத்தை யுமுடைய சங்கே! உன்னை ஆசையோடு ஒருவிஷயம் கேட்கிறேன், சொல்லவேணும்; உனக்குத் தெரியாத அம்ஸித்தைப்பற்றி நான் கேட்கப்போகிறதாக நினைக்கவேண்டா, கண்ணபிரானது திருவதரத்தில் ஊறுகின்ற அமுதத்தின் ரஸபரிமங்களைக் குறித்துக் கேட்கிறேனித்தனையல்லது வேறிலை; அவ்வமுதமானது பரிமளத்திலே பச்சைக் கருட்பூரத்தை ஒத்திருக்குமோ, அல்லது தாமரைப்பூவை ஒத்திருக்குமோ? ரஸத்தில் த்ருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக்கூடியவஸ்து யாதென்றும் எனக்கு ஸ்புரிக்கவில்லை; விலக்ஷணமான தித்திப்பை உடையதாயிருக்குமோ? எனக்குத் தெரியச் சொல்லவேணும் என்கிறாள். “கருப்பூரம் நாறுமோ“, “கமலப்பூநாறுமோ“ என்ற இரண்டிடத்திலும் உபமவுருபு தொக்கிக்கிடக்கிறது; கரும்பூரம்போல் நாறுமோ கமலப்பூப்போல் நாறுமோ என விரிக்க. சுவையும் நாற்றமும் - வாயினுடைய பரிமளத்தையும் வாயமுதத்தினுடைய ரஸத்தையும் என்க. ஆழிவெண்சங்கே = ஆழி என்று கடலுக்கும் பேராதலால், கடலில் நின்று தோன்றிய வெண்சங்கே! என்றுரைத்தலுமாம். (“வெண்சங்கே!.) கைவிடாதே அநுபவியாநிற்கச் செய்தேயும் உடம்பு வெளுக்கும்படியிறே இவனுடைய ஆற்றாமை“ என்ற வியாக்யான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்மின், சங்குக்கு வெண்மை இயற்கைக்குணமன்றுபோலும்,

English Translation

Tell me, O White Conch, I am eager to know. Does the mouth of our killer-of-the-rutted-tusker Lord Madavan bear the aroma of camphor, or the fragrance of lotus? Are his auspicious lips sweet to taste?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்