விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நால் திசைத் தீர்த்தம்*  கொணர்ந்து நனி நல்கி* 
  பார்ப்பனச் சிட்டர்கள்*  பல்லார் எடுத்து ஏத்தி* 
  பூப் புனை கண்ணிப்*  புனிதனோடு என்தன்னைக்* 
  காப்பு நாண் கட்டக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார் - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை - நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம் - தீர்த்தங்களை
கொணர்ந்து - கொண்டுவந்து
நனி நல்கி  - நன்றாகத்தெளிந்து

விளக்க உரை

உரை:1

சக்ரவர்த்தித் திருமகனாருடைய திருவபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஸ்ரீவாநரவீரர்கள் நாலுஸமுத்ரத்திலுமுள்ள தீர்த்தங்களையுங்கொணர்ந்தாப்போல என்னுடைய கல்யாணமஹோத்ஸவத்திற்காக வைதிகஸார்வபௌமர்களான பல அந்தணர்கள் நாற்றிசைகளினின்றும் நாநாவகைப் புண்யதீர்த்தங்களைக் கொண்டு வந்து, ஆயுஸ்ஸு முதலான நன்மைகளெல்லாமுண்டாவதற்காக அந்தத் தீர்த்தங்களாலே தம்பதிகளாகிய எங்களைப் பலகாலும் ப்ரோக்ஷித்து, “***“ (ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே) இத்யாதி வேதவாக்கியங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆஸீர்வாதங்கள் பண்ணிக் கண்ணாபிரானோடு என்னை இணைத்துக் கங்கண நூல்கட்டும் நிலைமையைக் கனவில் கண்டேனென்கிறாள். நனி - மிகுதியை உணர்த்தும் உரிச்சொல், மிகவும் என்றபடி நல்கு நல் - கொடுத்தல், இங்கு, ப்ரோக்ஷணம்செய்தல் ப்ராஹ்மண, என்ற வடசொல் பாப்பனன் எனத் திரிந்தது, பாப்பனர் - சிட்டர், பாப்பனச்சிட்டர், ப்ராஹ்மணயோநியிற் பிறப்புமாத்திரமின்றியே வேதங்களை நன்றாக ஓதி ஆசாரவ்யஹாரங்களில் ஒன்றுங்குறையாதிப்பவர்கள். “பல்லரண் டெடுத்தேத்தி“ என்பது அதுநிகர்களின் பாடம், வியாக்கியானத்தில் “ மங்களாசாஸநம்பண்ணி“ என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு பல்லாண்டு என்றபாடத்தைக் கற்பித்தனர்போலும், “பல்லார் எடுத்து ஏத்தி“ என்றபாடத்திற்கே வியாக்கியானம் நன்கு பொருந்தியிருக்குமாற்றைக் காண்மின்.

உரை:2

எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

English Translation

I had a dream O sister! Scores of sages and seers chanted on a high key; they anointed us with waters from the four Quarters, and then tied the talisman-thread on our wrists.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்