விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இந்திரன் உள்ளிட்ட*  தேவர் குழாமெல்லாம்* 
  வந்திருந்து  என்னை* மகட்பேசி மந்திரித்து* 
  மந்திரக்கோடி யுடுத்தி*  மணமாலை* 
  அந்தரி சூட்ட*  கனாக்கண்டேன் தோழீ! நான்*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் - இந்திரன் முதலான தேவஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து - (இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தைசொல்லி
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் - இந்திரன் முதலான தேவஸமூஹங்களெல்லாம்
என்னை மகள் பேசி - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தைசொல்லி
 
 

 

விளக்க உரை

இந்திரன் முதலிய வானவர்களெல்லாரும் ‘நம்முடைய பெருமானுக்கு நடக்கப்போகிற கல்யாணம் ஹோக்ஸவத்தை நாமெல்லாருமாய்க் கூடியிருந்து காரியங்கள் செய்து நிறைவேற்றிவரவேணும்; என்று குதூஹலித்துத் தலையிலேகால் பாவிவந்து ‘இக்காரியம் முடிந்தாலன்றி நாங்கள் எழுந்திருப்பதில்லை‘ என்று பிடிவாதமாயிரந்து ‘எங்களபெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாக்கித் தரவேணும்‘ என்று பெரியதிரளிலே பிரார்த்தித்து, பிறகு உபவர்க்கத்தாரும் ரஹஸ்யமாகவிருந்து பூஷணபீதாம்பரங்கள் விஷயமாகவும் மற்றுமுள்ள ஸம்விதாநங்கள் விஷயமாகவும் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளவேண்டியவற்றைக்காதோடு காதாகப்பேசி முடித்து, இனிக் காலவிளம்பம் செய்தால் ஏதாவது இடையூறு நேரிடக்கூடுமென்றெண்ணி அப்போதே, மணமகளுக்கு நாத்தனாரைக்கொண்டு புடவையுடுத்திகிறக்ரமத்திலே எனக்கு நாத்தனாரான துர்க்கையைக்கொண்டு புடவையுடுத்தி நன்மாலைகளையும் சூட்டுவித்து இப்படிப்பட்ட சில பாணிக்ரஹணபூர்வாங்கங்கள் நடைபெறக் கனாக்கண்டேனென்கிறாள்.

English Translation

I had a dream O sister! Indra and the hordes of celestials came. They approved the match and chanted Mantras. Andari his sister draped me with the bridal Saree and garland.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்