- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
கல்யாணப்பந்தல்களில் பாளைகளோடு கூடின பரக்குமாரங்களைக் கொண்டு வந்துநாட்டி அலங்காரம் செய்தல் முறைமையென்க. பரிசு என்று அலங்காரத்துக்கும் பெருமைக்கும் ஸம்மானத்துக்கும்பேர். பாளைகள் நிறைந்த கமுகளாகிய அலங்காரம் அணிந்தபந்தலின்கீழ் என்கை. “பந்தற்கீழ்“ என்றும் “பந்தர்க்கீழ்“ என்றும் பாடபேதங்கள். பந்தல், பந்தர் - கடைப்போலி. கோளரி - மிடுக்கையுடைத்தான சிங்கம், “கோளரி மாதவன் கோவிந்தம்“ என்று அடுக்கியருப்பதற்கிணங்கப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ள ரஸமயமான அர்த்தவிசேஷம் ரஸிகர்களின் நெஞ்சையுருக்கும், கோளரி - கண்ணபிரான் கல்யாணப்பந்தலுக்கு நடந்துவரும்போது நாட்டுப் புறத்துப்பையல்களைப் போலல்லாமல் தன்பெருமையெல்லாம் தோற்ற மிடுக்கோடே நடந்தபடியைச் சொல்லுகிறது. “அப்ரமேயம்ஹிதத்தேஜ,“ என்னும்படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே. மாதவன் - பரமரஸிகன் என்று தோன்றுமாறு நடந்துவந்தபடியைச் சொல்லுகிறது. மா - பிராட்டிக்கு, தவன் - கொழுநன், என்றால் பரமாஸிகன் என்று தானே பொருள்படும். (கோவிந்தன்) “***“ (ச்ரேயர்மஸிபஹுவிக்நாநி) என்றபடி நற்காரியங்களுக்கு இடையூறுகள் மிடைதருமாதலால் இந்தவிவாஹ மஹோத்ஸவத்துக்கு யாரால் என்ற இடையூறு நேர்ந்துபிடுமோ என்று அஞ்சி ஒருவரையும் விரோதித்துக்கொள்ளாமல் எல்லாரும் கையாளாய் முகங்கொடுத்துக்கொண்டு வந்தபடியைச் சொல்லுகிறது. கோவிந்தனென்றாலும் ஸர்வஸுலபனென்றாலும் பாயாயமென்று கொண்மின். காளை - நல்ல இளைமைப்பருவம் வாய்ந்தவனென்கை, காளையே எருது பாலைக்கதிபன் நல்லினையோன் பேராம“ என்பது நிகண்டு.
உரை:2
நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.
English Translation
I had a dream O sister! Under a canopy of Areca fronds, he stood like a lion called Madavan alias Govindan. They fixed our wedding for the morrow.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்