விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்*  இருடீகேசன் வலி செய்ய* 
    முத்தன்ன வெண்முறுவல் செய்யவாயும் முலையும்*  அழகழிந்தேன் நான்* 
    கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை*  கொள்ளும் இளங்குயிலே*
    என்  தத்துவனை வரக் கூகிற்றியாகில்*  தலையல்லால் கைம்மாறிலேனே!*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொத்து - பூங்கொத்தானவை
அலர் - மலருமிடமான
காவில் - சோலையிலே
மணி தடம் - அழகானவொரு இடத்திலே
கண் படைகொள்ளும் - உறங்குகின்ற

விளக்க உரை

எந்தத் திசை நோக்கினாலும் ஒவ்வொரு திசைக்கும் நிர்வாஹகர்களான இந்திரன் வருணன் குபேரன் என்னும்படியான தேவர்கள் மார்பை நெறித்துக்கொண்டு ‘எனக்குமேற்பட்ட தெய்வமில்லை, எனக்குமேற்பட்ட தெய்வமில்லை என்றிருப்பார்கள்; அவர்கள் எம்பெருமானைக் கண்டவாறே “போற்றி - பல்லாண்டு ஜிகந்தே” என்று பணிந்தேத்துவார்கள். அப்படிப்பட்ட துர்மாநிகளும் அஹங்காரத்தை விட்டொழித்துப் பணிகைக்குக் காரணமென்னென்னில்’ இருடீகேசனன்றோ இவன்’ “இந்த்ரியாணாம் நியந்த்ருத்வாத் ஹ்ருஷீகேச: ட்ரகீர்த்தி: என்றன்றோ நிருக்கியிருப்பது. எல்லாருடைய இந்திரியங்களையும் அடக்கி ஆளுமவன் இவனாகையாலே அவர்களுடைய துர்மாநத்தைத் துலைத்து அவர்களால் புகழப்பெற்றான்’ அப்படி அவன் எல்லார்க்கும் ஸமாச்ரயணீயனாயிருந்துவைத்துத் தன்னை எனக்குக் காட்டாமல் மிறுக்குகளைப் பண்ணுகிறானாகையாலே என்முறுவலும் நிறம்மாறி அதரமும் அழகழிந்து முலைகளும் வேறுபடும்படி சீர்குலைந்தேன்நான், என்கிறாள் முன்னடிகளில். இருடீகேசன்வலிசெய்ய ஸ்ரீ என் இந்திரியங்களெல்லாவற்றையும் கொள்ளைகொண்டு என்னை எளிமைப்படுத்தி இவ்வளவிலே தனது ஸௌசீல்யகுணத்தையும் மறைத்திட்டு சத்ருக்களுடைய கோஷ்டியிலே காட்டவேண்டிய மிறுக்கைக் காட்டுகிறானென்னவுமாம். முறுவல் ஸ்ரீ பல்லுக்கும் சிரிப்புக்கும் பெயர்.

English Translation

By the pain inflicted on me by Hrishikesa, the Lord of the celestials, I have lost my pearly smile, my red lips and my beautiful breasts. O Young Koel nestling in a cozy nook amid bunches of flowers, if you call my honourable Lord, I will bow my head in gratitude.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்