விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்*  வில்லிபுத்தூர் உறைவான் தன்* 
  பொன்னடி காண்பதோர் ஆசையினால்*   என் பொ ருகயற் கண்ணிணை துஞ்சா* 
  இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் கோலக்கிளியை* 
  உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!*  உலகளந்தான் வரக் கூவாய்*. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளையாடும் - விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன் - எழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய
பொன்அடி - அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால் -காணவேணுமென்றுண்டான ஆசையினாலே

விளக்க உரை

பரமபதத்திலே நித்யஸூரிகளுக்கு காட்சிகொடுத்துக் கொண்டு இருக்கக் கடவனான எம்பெருமான் அவ்விருப்பை விட்டு என்னைப் போன்ற வஸ்துக்களைப் பார்த்துப்கொண்டு போது போக்துவதற்காகவன்றோ ஸ்ரீவில்லிபுத்தூரிரிலே எழுந்தருளினான்’ என்னுடைய நடைபோன்ற நடை படைத்த அன்னப்பறவைகள் நாற்புறமும் நிறைந்து விளையாடப்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிரில் அவன் எழுந்தருளியிருந்து தன் கண்களின் பட்டினியை ஒருவாறு தீர்த்துக்கொண்டான்; அது போல என்கண்களின் பட்டினியும் தீரவேண்டாவோ? அவனுடைய கண்களானவை என்னை ஸாக்ஷாத்தாகப் பாராமல் என்னோடுஸஜாதீயங்களான வஸ்துக்களைப் பார்த்தாலுங்கூட பட்டினி தீரும்படியாயிருக்கின்றன; என்னுடைய கண்களோவென்றால் அப்படிக்கன்றி அவனுடைய திருவடிகளையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கவேணுமென்று ஆவல்கொண்டு அந்த ஆவல் நிறைவேறப்பெறாமையினாலே ஒரு க்ஷணமும் துஞ்சுகின்றனவில்லையென்கிறாள்- முன்னடிகளில்.

English Translation

The Lord lives in Villiputtur, where swans in pairs gracefully flap and play. Desirous of seeing his golden feet, my warring fish-like eyes have not closed. O Koel, go and call the Lord who strode the Earth! I shall be friend you to my parrot, brought up milk and sweet morsel.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்