விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்புருகி இனவேல் நெடுங்கண்கள்* இமை பொருந்தா பல நாளும்* 
    துன்பக்கடல் புக்குவைகுந்தன் என்பதோர்*  தோணி பெறாது உழல்கின்றேன், 
    அன்புடையாரைப் பிரிவுறு நோய்*  அது நீயும் அறிதி குயிலே* 
    பொன்புரை மேனிக்கருளக் கொடியுடை*  புண்ணியனை வரக்கூவாய்*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்பு உருகி - எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா - சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக்கிடக்கின்றன வில்லை’
பல நாளும் - நெடுங்காலமாக
துன்பம் கடல்புக்கு - விச்லேஷவ்யஸநமா கிறகடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணிபெறாது - ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்

விளக்க உரை

குயிலே! எம்பெருமானைப் பிரிந்தனாலே எனக்குண்டான க்லே ? ம் மேலெழத் தோல்புரையே போமதன்று’ எலும்புங் கூட உருகும்படியாயிரா நின்றது’ அவ்வளவேயா, ஒருநொடிப் பொழுதும் கண் உறங்குவதுமில்லை. (‘அநித்ரஸ் ஸததம்ராம:’) என்றும் “உண்ணாதுறங்காது” என்றும்- என்னைப் பிரிந்து அவன்படவேண்டிய பாட்டை நானன்றோ இப்போது படரநின்றேன். இப்படிகழிவது ஒருநாளா இரண்டு நாளா? பலநாளாகவே பிரிவாற்றாமையிகிற துக்கசாகரத்திலே யழுந்தி அந்தஸாகரத்தைக் கடத்தவல்ல “விஷ்ணு போதம்” என்று ப்ரஸித்தமானதொரு தோணியைப் பெறாது வருந்திக் கிடக்கின்றேன் காண். ‘என்ன தான் விச்லேஷம் நேர்ந்தாலும் இப்படிகூட நோவுபடலாமோ?’ என்று நினைக்கிறயோ, அப்படி நினையாதே கொள்’ ஏதோ பாக்யத்தாலே இன்று நீ ழூ தூரிவிரியமலருழக்கித் துணையோடும் பிரியாதேயிருந்தாயாகிலும் ‘ஸம்ச்லேஷா: விச்லேஷாந்தா: விச்லேஷா: ஸம்ச்லேஷாந்தா:” என்ற கணக்கிலே இதற்கு முன்பு நீயும் பிரிந்து துன்பப்பட்டேயிருப்பாய்’ இனிமேலும் என்றைக்காவது உனக்குப் பிரிவு நேராதிருக்கப் போகிறதில்லை’ அப்போது நீ துன்பப்படாதிருக்கப் போகிறதில்லை’ ஆகையாலே அன்பர்களைப் பிரிந்தால் துயரம் பொறுக்கமுடியாததுதான் என்னும் விஷயத்திலே உனக்கு ஏற்கனவே வயத்பத்தியிருப்பதனாலே இப்போது நான் துன்பப்படுவதைப் பற்றி நீ அவஹேளநமாக ஒன்றும் நினைக்கலாகாது’ இத்துன்பத்தைத் தீர்க்குமுயாயமமே நீ செய்ய வேண்டும்’ அதாவது-பெரியதிருவடியை த்வஜமாகவுடையனான அப்பெருமான் இங்கே எழுந்தருளும்படி கூவக்கடவை என்கிறாள்.

English Translation

My body has melted to the bones; my eyes have not closed for many days. Cast into the ocean of misery, I am drifting without a lifeboat. O Koel who knows what is to be separated from a beloved, go and call the blessed Lord of golden hue, --he bears a Garuda banner.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்