விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட*  விமலன் எனக்கு உருக்காட்டான்* 
    உள்ளம் புகுந்து என்னை நைவித்து*  நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்* 
    கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்*  களித்து இசை பாடும் குயிலே* 
    மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது*  என் வேங்கடவன் வரக் கூவாய்*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள் அவிழ் - தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ - செண்பகப் பூவிலே
மலர்கோதி - (அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து - (அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே - (அந்த ஆநந்தத்திற்குப் போக்குவீடாக) இசைகளைப்பாடா நின்றுள்ள கோகிலமே!’

விளக்க உரை

தன்னை எம்பெருமான் நோவு படுத்துகிறபடியை முன்னடிகளில் அருளிச்செய்கிறாள். கார்முகில் போன்ற கரியதிருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போன்ற முழக்கத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை இடத்திருக்கையிலே ஏந்தியிரா நின்றுள்ள எம்பெருமான் தன்னைக் காண்கையிலே மிக்க ஆசையுள்ள எனக்குத் தன் திருவுருவத்தைக் காட்டாதே மறைத்திடாநின்றான். அவன் இப்படி உபேக்ஷிக்கையாலே அவ்வுருவத்தை மறந்து பிழைப்போம் என்று பார்த்தாலோ, அது செய்யுவும் ஒட்டுகிறிலன்’ என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே வந்துபுகுந்து நினைதொறும் சொல்லுந்தோறும் நெஞ்சிடிந்துகும்” என்கிறபடியே சைதில்யத்தையுண்டாக்கி அந்தத் தளர்த்தியாலே உயிர்மாயுமளவான நிலைமை நேர்ந்தவாறே “இவ்வளவோடு இவளை முடிந்து பிழைக்க வொட்டலாமா? இன்னும் நெடுநாளைக்குத் துன்பம் படுத்தவேண்டாவா?” என்றெண்ணி மறுபடியும் உயிரைச் சிறிது தலையெடுக்கச் செய்து பழையபடியே ஹிம்ஸிப்பதாய் இப்படி துடிக்கவிட்டு இதுவே போதுபோக்காயிரா நின்றான்’ ஓ குயிலே! நான் இப்படி நோவுபடா நிற்க, நீ ஆநந்தமயமாக இசைபாடிக்கொண்டு போது போக்குவது நியாயந்தானா? தேன் பெருகா நின்றுள்ள செண்பகப்பூவில் அஸாரமான அம்சத்தைக்கழித்து ஸாரமான பாகத்தை அநுபவித்து அவ்வநுபவத்தாலுண்டான களிப்பு உள்ளடங்காமல் அதற்குப் போக்குவிட்டு இசைபாடிக் கொண்டிருக்கிறாயே, இதுவோ நன்மை? நான்படும் துயரத்தைப் பாரிஹரித்த பின்பன்றோ நீ களிக்கவேணும் உனக்காக நான் செய்யத்தக்கது என்ன?” என்று கேட்கிறாயோ, எப்போதும் என்னருகேயிருந்துகொண்டு அவ்யக்த மதுரமாக மென்சொற்களைச் சொல்லுவதும் விலாஸ சேஷ்டி தங்களைப் பண்ணுவதுமா யிருக்கிறாயே இந்த இருப்பைத் தவிர்ந்து, பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக ஸ்ரீமிதிலையில் புறச்சோலையிலே வந்து தங்கியிருந்தாப்போலே எனக்காகத் திருமலையிலே வந்திராநின்ற பெருமானை இங்ஙனே நாலடி வரும்படியாக நீ கூவவேணும் என்று வேண்டுகிறாள்.

English Translation

The pure Lord who bears a white conch does not appear, alas! Day by day he torments my heart, and enjoys my dying dance. O Koel sipping honey from the choicest Senbakam flowers with a merry songs! Do not evade me with slippery sweet-talk, go now and call my Venkatam Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்