விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு பெரும்புகழ் மாதவன்*  மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை 
  உகந்தது காரண மாக*  என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே?* 
  புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்*  பொதும்பினில் வாழும் குயிலே!* 
  பன்னி எப்போதும் இருந்து விரைந்து*  என் பவளவாயன் வரக் கூவாய்*. (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புன்னை - புன்னைமரங்களும்
குருக்கத்தி - குருக்கத்திமரங்களும்
நாழல் - கோங்குமரங்களும்
செருந்தி - சுரபுன்னைமரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில் - சோலையிலே

விளக்க உரை

உலகத்தில் அனைவராலும் பழிக்கப்பட்டவனாயும் பிச்சைக்காரனாயும் கண்கொண்டு காணவொண்ணாத விகாரமான ரூபத்தையுடையவனாயும் அனைவர்க்கும் கீழ்ப்பட்டவனாயுமுள்ள ஒரு காபுருஷனை நான் ஆசைப்பட்டடேனாகில் எக்கேடுகெட்டாலும் பாதகமில்லை’ நான்கு திசைகளிலும் பரவியநித்ய கீர்த்தியையுடையவனாய் ஸாக்ஷாத் திருமாமகள் கொழுநனாய் கண்டார்கண்களைக் கவரும்படியான நீலமணிபோன்ற நிறத்தையுடையனாய் ‘அனைவரையும் ரக்ஷித்தருளக்கடவேன்’ என்று முடிகவித்துக் கொண்டிருப்பவனாய் நினைத்தபடிசெய்து முடிக்கவல்ல வலிவு படைத்தவனான எம்பெருமானை நான் ஆசைப்பட்டு இக்கேடு கெடுகிறேனே! இது நியாயந்தானா? இங்ஙனேயோ உலகநீதியிருக்கும்படி! என்கிறாள் முன்னடிகளில். (என்சங்கு இழக்கும் வழக்கு உண்டே?) சங்கு இழத்தலாவது - கைவளை கழன்றொழிகை’ தலைமகனைப் பிரிந்து வருந்துவதனால் உடம்பானது ஈர்க்குப்போல க்ருசமாய்ப் போக ‘கைகளிற் பொருத்தமாக அணியப்பட்ட வளைகளும் அவலீலையாகக் கழன்றுவிழும்: - யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத்‘ணேந தந்வங்க்யா:- களிதாநி - புரோவலயாநி அவராணி புநஸ்ததைவ தளிதாநி.”) என்ற ச்லோகத்தின் தாற்பாரியம் இங்கே நினைக்கத்தகும். அதாவது தலைமகன் தலைமகளை நோக்கி, ‘என்கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று சொன்ன நொடிப்பொழுதிலேயே அவளுடைய கையில் அணியப்பட்டுள்ள வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே வீழ்ந்தன’ அதனைக்கண்ட தலைமகன் ‘இவள் நமது விரஹத்தைப் பொறுத்திருக்க வல்லளல்லளாகையாலே இவளைப்பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நான் போகவில்லை’ என்று சொல்லவே அச்சொல் செவிப்பட்ட நொடிப்பொழுதிலேயே கையில் நின்றும் கழன்றவைபோக நின்ற வளைகள் படீல் என்று வெடித்துத் துகளாய் விழுந்தன - என்பது மேற்காட்டிய ச்லோகத்தின் கருத்து. நாயகனுடைய விரஹம் ப்ரஸ்தாவத்தில் வந்தமாத்திரத்திலேயே நாயகியனது உடல் மிகவும் மெலிந்து போம் என்பதும், அந்த விச்லேஷ வார்த்தை மாறினவாறே உடம்பு பூரித்துக்கிடக்க ப்ராப்தமாயிருக்க, இப்படி பிரிந்து மெலிந்து வருந்துகை தகுதிதானா? என்றவாறு.

English Translation

The world-renowned gem-Lord Madavan is a crowned emperor. I loved him and lost my bangles, is this fair? O koel haunting the Punnai, Kurukkatti, Nalal and Serundi groves! Go now quickly to my Lord of coral lips and tell him to come.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்