- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
ஆவல் அன்புடையயார் தம் ஸ்ரீ ஆவல் என்றாலும் அன்பு என்றாலும் பொதுப்படையாக ப்ரேமத்தைச் சொல்லுமாகிலும், கோபம் ரோஷம் இத்தியாதிபதங்களின் அர்த்தத்திலே நுட்பமான பேசும் இருக்கிறாப்போலே இங்கும் சிறிது பேதம் உண்டு’ ‘எம்பெருமானே உபாயோபேயங்கள்’ என்கிற ‘அத்யவஸாயம் கிடக்கச்செய்தேயும் நோன்பு நோற்பது, காமன் காலிலே விழுவது, சிற்றிவிழைப்பது பனிநீராடுவது, கூடலிழைப்பது இவைபோல்வன அதிப்ரவருத்திகளில் துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் ஆவலெனப்படும். “மல்லாண்டதிண்டோள் மணிவண்ணா!” என்று எம்பெருமானுடைய மிடுக்கின் மிகுதியை அறிந்திருக்கச் செய்தேயும் அவனை ரக்ஷ்யனாகவும் தன்னை ரக்ஷகனாகவும் நினைத்துப் பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும் ப்ரேமம் அன்பு எனப்படும் என்று கொள்க. ஆவல்- ஆண்டாளுடையபடி; அன்பு-இவளுடைய திருத்தகப்பனாரான பெரியாழ்வாருடையபடி, ஆக இவ்விரண்டையும் சொன்னவித்தால் தங்கள் குடியிலுள்ளார் மனத்தோடல்லது வேறொருவர்மனத்தோடு பொருந்தமாட்டான் எம்பெருமான் என்றாளாய்த்து. மேவலன்ஸ்ரீவிரும்பாதவன் என்றபடி “நம்பும் மேவும் நசையாகுமே.” என்பது தொல்காப்பியம்.
உரை:2
பக்தியுடையவர் தம் மனத்தன்றி வேறு ஒருவர் மனத்திலும் நில்லாதவன், நறுமணம் சூழ்ந்த துவாரகைப்பதியின் காவலன், கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.
English Translation
Gopala-the-lad who grazed cows happily is the Lord and King of fragrance-wafting Dvaraka. He eludes all but dwells in the hearts of lovers and seekers. If he will come, then join, O Lord-of-the-circle.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்