விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்று இன்னாதன செய்*  சிசுபாலனும்* 
  நின்ற நீள்*  மருதும் எருதும் புள்ளும்* 
  வென்றி வேல் விறல்*  கஞ்சனும் வீழ*  
  முன் கொன்றவன் வரில்*  கூடிடு கூடலே!*   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முற்காலத்தில்
இன்னாதனசெய் சிசுபாலனும் - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்துவந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருதமரங்களும்
எருதும் - ஏழுரிஷபங்களும்
புள்ளும் - பகாஸுரனும்

விளக்க உரை

உரை:1

சிசுபாலவதம் முதலிய ஐந்தாறு சாரித்திரங்களிலே ஈடுபட்டுப் பேசுகிறாள். சிசுபாலன் வரலாறு :- விகர்ப்பததேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மி என்கிற பிள்ளையும் ருக்மணி என்கிற பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷிமியின் அவதாரம். அவளுக்கு யுக்தவயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹம்செய்து கொடுக்கவேணுமென்று கேட்க, ருக்மி என்பவன் அவளைச் சோதிதேசத்ரசனான சிசுபாலனுக்குக் கொடுக்க விரும்பிய வனாதலால் க்ருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான். சில நாள் கழித்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகல தேசத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான். அவர்கள் வந்துசேர்ந்தவுடனே க்ருஷ்ணனும் பல ராமாதிகளைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப் போய்ங் கல்யாணத்துக்கு முதல்நாள் அந்த ருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான். பின்பு அங்குள்ள தந்தவக்த்ரன் முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர, அவர்களைப் பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டி ஓடும்படி செய்துவிட்டனர். பிறகு ருக்மிணிப் பிராட்டியின் தமையனான ருக்மியானவன் ‘இப்படி செய்கையாவது ஏன்?’ என்று எதிர் பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத் தகைய, அப்போது ஸ்ரீ க்ருஷ்ணன் ‘இவனைக் கொன்றால் ருக்மிணி மனம் வருந்துவாள்’ என்று அவனைப் பிடித்துத் தனது தேர்க்காலிலே கட்டி அப்பாலே அவனது தலையைச் சிரைத்திட்டு மாநபங்கஞ் செய்துவிட்டுப் பின்பு ருக்மிணியை விதி பூர்வகமாகக் கல்யாணஞ் செய்துகொண்டான். இஃது இப்படி நிற்க:- சிசுபாலன் பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார் இவனைத் தொடுகையில் இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று: அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன, அதனால் ‘இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த சிசு பாலன்தாய் யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் ‘இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்ருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும் பூர்வஜந்ம வாஸனையாலும் வளர்ந்த மிக்க பகைமையைப் பாராட்டி, எப்பொழும் அப்பெருமானுடைய குணங்களையும் திவ்யசேஷ்டிதங்களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்துவைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணஞ்செய்துகொண்டதுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்க வைரங்கொண்டனன். பின்பு இந்த்ரப்ரஸ்த நகரத்தில் நடந்த ராஜஸூயயாகத்தில் தர்மபுத்ரனாற் கண்ணபிரானுக்கு அக்ரபூஜை செய்யப்பட்டதைக் கண்டு அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணபிரானுடைய திருவாழியினால் தலைதுணிக்கப்பட்டு இறந்து தேஜோமயமான திவ்யசாரிரம் பெற்று எம்பெருமானது திருவடியை அடைந்தனன்.

உரை:2

அன்று தீயவைகளைச் செய்த சிசுபாலனையும், உயர்ந்து நின்ற மருதமரத்தையும், எருதையும், கொக்கையும், வெற்றி தரும் வேலைக் கொண்டிருந்த வீரனாம் கம்சனையும், கொன்றவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.

English Translation

Krishna is the Lord who killed the bird, the bulls, the trees, the mighty monarch Kamsa, and the abusive tyrant Sisupala. If be will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்