- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வஸுதேவதேவியான தேவகியின் எட்டாவது கருவில் திருமால் கண்ணனாய் அவதரிக்க, அப்போதே வஸுதேவ தேவகிகளின் கால் விலங்கு இற்று முறிந்துவிழ, அக்குழந்தையைக் கம்ஸன் கொல்லக் கூடுமென்ற அச்சத்தினால், தாய் தந்தையர் அத்தெய்வக் குழவியின் அநுமதிபெற்று அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாம் தலைவரான நந்தகோபரது திருமாளிகையிலே ரஹஸ்யமாகக் கொண்டு சேர்த்து விட்டு’ அங்கு அப்பொழுது அவர் மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாகப் பிறந்திருந்ததொரு பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விட, அது முதற் கம்ஸனைக் கொல்லுகிறவரையிற் கண்ணபிரான் அக் கோகுலத்திலேயே நந்தகோப குமாரனாய் யசோதை வளர்க்க வளர்ந்தருளின் னென்ற வரலாறு அறிக. பிரானே! நீ கஞ்சனுக்குத் தப்பிப்பிழைத்து எங்களை யெல்லாம் வாழ்விப்பதற்காக வென்று நினைத்திருந்தோம்’ இன்று நீ செய்யும் படிகளைப் பார்த்தால் எங்களைத் துக்கப்படுத்துவதற்காகவே நீ தப்பிப் பிழைத்தாய் என்று நினைக்கலாய்த் தென்கிறார்கள்.
English Translation
O Sire come to hurt the feelings of us stranded maidens! In the dead of the night you could escape from Kamsa’s trap. Yasoda does not scold; she lets you go as you wish. O Shameless one who sucked the ogress’s breasts, hand us our clothes.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்