விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்னியரோடு எங்கள் நம்பி*  கரிய பிரான் விளையாட்டைப்* 
    பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த*  புதுவையர்கோன் பட்டன் கோதை* 
    இன்னிசையால் சொன்ன மாலை*  ஈரைந்தும் வல்லவர் தாம் போய்* 
    மன்னிய மாதவனோடு*  வைகுந்தம் புக்கு இருப்பாரே*. (2)       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கள் நம்பி - எமக்கு ஸ்வாமியாய்
கரிய - கார் கலந்த மேனியனான
பிரான் - கண்ணபிரான்
கன்னிய ரோடு - ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை - திவ்யலீலைகளைக் குறித்து

விளக்க உரை

கண்ணபிரானுக்கும் இளவாயர்மகளிர்க்கும் பொய்கைக் கரையிலே நடந்த லீலாரஸத்தைக்குறித்து ஆண்டாள் பரமபோக்யமாக அருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள், பரமபதம் சென்று புக்குப் பரவாஸுதேவனுடைய பாதாரவிந்தங்களின்கீழ் வாழப்பெறுவர் என்று - இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு, ஈற்றடியில் “மன்னிய” என்பதை வைகுந்தத்துக்கு அடைமொழியாக்குதலும் ஒன்று. அடிவரவு கோழி இது எல்லே பரக்க காலை தடத்து நீர் மாமி கஞ்சன் கன்னி தெள்ளியார்.

English Translation

This decad of sweet songs by Pattarbiran, King of famous Puduvai recalls the words of fragrant coiffured Yasoda to the cloud-hued Lord weaning him from breast milk. Those who sing it well will become devotees of the Lord Hrisikesa.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்