விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோழி யழைப்பதன் முன்னம்*  குடைந்து நீராடுவான் போந்தோம்* 
    ஆழியஞ் செல்வன் எழுந்தான்*  அரவணை மேல்பள்ளி கொண்டாய்* 
    ஏழைமை யாற்றவும் பட்டோம்*  இனி என்றும் பொய்கைக்கு வாரோம்* 
    தோழியும் நானும் தொழுதோம்*  துகிலைப் பணித்து அருளாயே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவு அணை மேல் - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய் - திருக்கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து - (குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான் - நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம் - கோழி கூவுதற்கு முன்னம்

விளக்க உரை

கண்ணபிரான் இரவின் முற்கூறெல்லாம் பெண்களோடே புணர்ந்து கிடந்து பிற்கூற்றில் உறங்குமவனாதலால், ஸூர்யோதயமளவும் அவன் கண் விழியான் என்று நினைத்து இவ்வாய்ச்சிகள் கோழிகூவுவதற்கு முன்னமே குளத்தில் நீராடி மீள்வதாக வந்தார்கள்’ இவர்கள் நினைத்தது ஒன்றாய், முடிந்தது வேறாய்த் தலைக்கட்டிற்று. இவர்கட்குந் தெரியாமல் கண்ணன் அங்கு வந்து சேர்ந்தனனாதலால் அவனாலே தாங்கள் மிகவும் ஏழைமைப்பட்டு ஸூர்யோதயமாகயும் தாங்கள் வந்த காரியம் தலைக்கட்டப் பெறாமையைக் கண்டு வருந்திக் கூறுகின்றனர். ‘அப்பா! இன்று நாங்கள் குளத்திற்குவந்து பட்டபாடு போதும்’ இனி ஏழேழ்பிறவிக்கும் இக்குளத்தின் முகத்திலும் நாங்கள் விழிப்பதில்லை’ என்றார்கள். இவர்கள் ‘குடைந்து நீராடுவான் போந்தோம்’ என்றவாறே, தமிழர் கலவியைச் சுனையாடலாகச் சொல்லும் முறைமையை உணர்ந்த கண்ணபிரான் தானும் நெஞ்சில் ஒன்றை நினைத்து ‘அங்ஙனே நீராடுகைக்குத் தடை ஏன்?’ என்ன’ அவனது கருத்தை அறிந்த ஆய்ச்சிகள், ‘பிரானே! அந்த ஆசைக்கு. இடமாறும்படி பாழுஞ்சூரியன் வந்து தோன்றிவிட்டனனே!’ என்றனரென்க. செல்வன் என்றதை விபரீதலக்ஷணையாகக் கொள்வது பொருந்தும். எனவே, “செல்வனாழியன்” என்றது- பாழுஞ்சூரியன் என்றபடி. சுனையாடலுக்கு விரோதியாக வந்து தோன்றினபடியால் வசவுக்கு உடலாமத்தனையிறே. (ஏழைமை ஆற்றவும் பட்டோம்) நீ நெடுநாள் எங்கள் கையில்பட்டதெல்லாம் ஒருக்ஷணத்தில் நாங்கள் உன்கையிலே பட்டோமென்கிறார்கள். இங்ஙனே இவர்கள் பாரிதாபந்தோற்றச் சொல்லச்செய்தேயும், அவன் ‘இன்று நீங்கள் என்னை வஞ்சித்துவந்த குற்றந்தீர ஒரு அஞ்ஜலி பண்ணுங்கள்’ என்றான்’ ஒரு கையாலே தொழுதார்கள். ‘ஏகஹஸ்தப்ரணாமம் மஹாபசாரகோடியில் கணக்கிடப்பட்டுள்ளது’ இரண்டு கையாலும் தொழுமின்’ என்றான். இவர்கள் தாம் துகிலிழந்திருப்பதனால் அங்ஙன் செய்யமாட்டாதே இருவரிருவராய்ச் சேர்ந்து தொழுகிறார்கள்-“தோழியும்நானுந் தொழுதோம்” என்கிறார்கள்.

English Translation

‘Ere the cock crowed we arrived here to bathe. O Sire who sleeps on a serpent, the blessed Sun has risen. We are shamed; never again shall we come to this pond. Sister and I plead with folded hands, pray hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்