விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சீதைவாய் அமுதம் உண்டாய்!*  எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று* 
  வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச்சொல்லை* 
  வேதவாய்த் தொழிலார்கள் வாழ்*  வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்* 
  கோதை வாய்த் தமிழ் வல்லவர்*  குறைவின்றி வைகுந்தம் சேர்வரே* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாய் அமுதம் - அதராம்ருதத்தை
உண்டாய் - பருகினவனே!
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று
வீதிவாய் - வீதியிலே
விளையாடும் - விளையாமாநின்ற

விளக்க உரை

இத்திருமொழியை ஓதவல்லவர் பெறும் பேற்றைக் கூறும் பாசுரம் இது’ “சீதைவாயமுதமுண்டாய்” என்ற விளியும், “ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை” என்பதும் நோக்கப்படவேணும். பருவம் நிரம்பினவளோடே ரஸாநுபவம் பண்ணுவமன், எல்லாரும் திரளுமிடத்திலே மறைக்க வேண்டுமவற்றை மறைக்கவறியாமல் தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபமென்று உணர்த்தியவாறு போதருமென்க. சீதை-ஸீதா. அமுதம்- மழலைச் சொல் - பிள்ளைத்த்னம் சொட்டும்படியான பேச்சு.

English Translation

O Govinda, you have entered the patio! Along with our sand castles, with your sweet face and winsome smile, will you break our hearts as well? O Lord who took a big stride and braced the Earth, what will by standers say if you took us into your embrace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்