விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முற்றத்தூடு புகுந்து*  நின்முகங் காட்டிப் புன்முறுவல் செய்து* 
    சிற்றிலோடு எங்கள் சிந்தையும்*  சிதைக்கக் கடவையோ? கோவிந்தா* 
    முற்ற மண்ணிடம் தாவி*  விண்ணுற நீண்டளந்து கொண்டாய்* 
    எம்மைப்பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம் நின்றவர்  என் சொல்லார்?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முற்ற மண் இடம் தாவி - (ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு - பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய் - (மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்துகொண்டவனே!
முற்றத்தூடு - (நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து - நுழைந்து

விளக்க உரை

உரை:1

கண்ணபிரானுடைய கண்வட்டத்திலே நின்றால் அவன் பொறுக்கொணாத் தீமைகளைச் செய்கின்றானென்றஞ்சி அவனுக்குத் தெரியாதபடி ஒருவரொருவராகப் போய் ஒரு முற்றத்திற் புக்குக் கதவுகளை அடைத்துக் கணையங்களையும் போட்டு இவனுக்குப் புகுரவழியில்லாதபடி பண்ணி விளையாடா நின்றார்கள் ஆய்ச்சிகள்’ அம்முற்றத்திலே தங்கள் திரளின் நடுவே கண்ணபிரான் வந்து நிற்கக் கண்டார்கள்’ ‘நாம் இவனுக்குத் தெரியாமல் வந்தோமென்று நினைத்திரா நின்றோம்’ அழகிதாயிருந்தது’ இவன் நமக்கும் முற்பட்டு வந்து நின்றான்’ என்செய்தோமானோம்! இவன் கையிலே அகப்பட்டோமே! இனி இவனுக்குத் தென்பட்டோமாகாமல் கழியும்விரகு ஏதோ!’ என்று சிந்தித்து ஒருபோக்குக் காணாமல் வெள்கிக் கவிழ்தலையிட்டு நின்றார்கள். (நின்முகங்காட்டி.) இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று, நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’ என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க. அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல்செய்தான். ’நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள். அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு. ‘இனிக் கேட்கவேண்டிய பழியொன்றுமில்லை; எல்லாங் கேட்டாயிற்று; ஆவது ஆயிடுக’ என்று பெண்களின் பாரியட்டங்களைக் கிழித்து, அவர்கள் உடம்புகொண்டு தாய்மார்முன்பு நிற்கவொண்ணாதபடி பண்ணினான்; “எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம் நின்றவர் என் சொல்லார்” என்கிறார்கள். ‘என்னோட அணைகை உங்களுக்கு அஸஹயமாயிருந்ததோ? யோகிகளும் நம் உடம்புடனே அணையவன்றோ ஆசைப்படுவது’ என்று கண்ணபிரான்கூற, ‘உன்னோடு ஸம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே’ ஆனாலும் அருகிலுள்ளார்க்கு அஞ்சவேண்டுமே’ என்கிறார்கள். “இத்தால் ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமானபடி சொல்லுகிறது” என்பர் பொரியவாச்சான்பிள்ளை. ஆழ்வார்கள் ஆண்களாயிருந்துவைத்துப் பெண்ணுடை உடுத்து “மின்னிடைமடவார்” முதலிய திருவாய்மொழிகளில், என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகுநம்பீ!” “ஒருநான்று தடிபிணக்கே” என்றாற்போலச் சொல்லும் பாசுரங்கள் போலன்றியே, பெண்பிள்ளை தனக்கே அதுக்குமேலே ஒருமென்மை பிறந்து வார்த்தைசொல்லும் வீறுபாடு என்னே’ என்று நம்பிள்ளை ஈடுபட்டு உருகுவாராம்.

உரை:2

முற்றத்திலே ஊடாகப் புகுந்து உன் முகம் காட்டிப் புன்னகை செய்து எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்கள் சிந்தனையையும் சிதைக்கும் கோவிந்தா முழுவதுமாக மண் ,இடம் தாவி வானம் அளந்து கால் நீட்டி மொத்தமும் அளந்தாய்
எங்களைப்பற்றி (பிடித்து) உடல் மீது மல்லுக்கட்டி சண்டை இட்டால்
இதைப் பார்க்கும் என் பக்கத்தார் (என் வீட்டார் ) என்ன சொல்வார்கள்?

English Translation

O Govinda, you have entered the patio! Along with our sand castles, with your sweet face and winsome smile, will you break our hearts as well? O Lord who took a big stride and braced the Earth, what will by standers say if you took us into your embrace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்