விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெய்யுமா முகில் போல் வண்ணா!*  உன்  த‌ன் பேச்சும் செய்கையும்* 
    எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ* 
    நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு*  உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்* 
    செய்யதாமரைக் கண்ணினாய்*  எங்கள் சிற்றில்வந்து சிதையேலே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெய்யும் - வர்ஷியாநின்றுள்ள
மா முகில் போல் வண்ணா - காளமேகம் போன்ற திருநிறத்தையுடையவனே!
உன் தன் - உன்னுடைய
பேச்சும் செய்கையும் - (தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
மையல் - ஏற்றி பிச்சேறப்பண்ணி

விளக்க உரை

பிரானே! நீ எங்கள் திறத்தில் ‘அடியேன், குடியேன்’ என்றாற்போலே சொல்லும் அதிவிநய வார்த்தைகளும் கள்ளக்குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே; இதற்கெல்லாம் அடி உன் திருமுகமண்டலமிறே;l இப்படிப்பட்ட மயக்கத்தை உண்டுபண்ணுகைக்கு உன்முகம் அம்மான் பொடியோ? என்கிறார்கள் முன்னடிகளால். மாயமந்திரம்- மந்த்ர முறை உணர்ந்தவர்கள் ஒரு பொடியை மந்திரித்து ஒருவன் மேல தூரிவினால் அப்பொடி அவனை மயக்கிவிடுதல் போல, கண்ணபிரானது திருமுகம் இவர்களை மயக்கிவிட்டதென்க.

English Translation

We are not yet mature, our breasts have not ripened. We have not learnt to play your games using sand castles. O Lord who routed the army of Rakshasas in Lanka, Lord who burnt the city to dust, pray spares us!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்