விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குண்டு நீருறை கோளரீ!* மத யானை கோள் விடுத்தாய்!*
  உன்னைக் கண்டு மாலுறு வோங்களை*  கடைக்கண்களா இட்டு வாதியேல்* 
  வண்டல் நுண்மணல் தெள்ளி* யாம்வளைக் கைகளால் சிரமப்பட்டோம்* 
  தெண் திரைக்கடல் பள்ளியாய்!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குண்டு - மிக்க ஆழத்தையுடைத் தான
நீர் - கடலிலே
உறை - சாய்ந்தருள்பவனும்
கோள் அரி! - மிடுக்கையுடைய சிங்கம் போன்றவனும்
மதம் யானை கோள் விடுத்தாய் - மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த) துன்பத்தைத் தொலைத்தருளினவனுமான கண்ணபிரானே!

விளக்க உரை

(குண்டுநீர்) ப்ரளயகாலத்தில் உலகமெல்லாம் ஜலமயமாய் ஏகார்ணவமான நிலைமை’ “பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம்” என்றது காண்க. ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக எம்பெருமான் அந்த ஏகார்ணவத்தில் சாய்ந்தருளினமை அறிக. (“கடைக் கண்களாலிட்டு வாதியேல்.”) முழுநோக்குப் பெறவேணுமென்று ஆசைப்பட்டிருக்குமவர்கட்குக் கடாக்ஷவீக்ஷணம் (கடைக்கண் பார்வை.) ஹிம்ஸகமிறே. அணையவேணுமென்று விரும்பப்பட்ட வ்யக்தியை தூரிரத்தில் நின்று காண்கைக்கு மேற்பட்ட ஹிம்ஸை இல்லாதாப் போலே. யானை கோள்விடுத்த வரலாறு:- இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் ஒருநாள் விஷ்ணுபூஜை செய்கையில் அகஸ்திய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால் அவ்விருடியின் வரவை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன், தன்னை அரசன் அலட்சியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ‘நீ யானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகத் தோன்றினனாயினும், முன் செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையால் அப்பொழுதும் விடாமல் நாள் தோறும் ஆயிரந் தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூபறித்தற்குப் போய் இறங்கியபொழுது, அங்கே முன்பு நீர் நிலையில் நின்றுத் தவஞ்செய்து கொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூ என்னுங் கந்தருவன் அவ்யானையின் காலைக் கௌவிக்கொள்ள அதனைக் விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடன் மீதேறி அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருளினன் என்பதாம்.

English Translation

We ‘swept the streets and brightened our castles with fine sand. You have come and spoilt our beautiful designs. See, we are pained and hear broken, but not angry. O Naughty Krishna Kesava! Have you no eyes on you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்