விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானிடை வாழும் அவ் வானவர்க்கு*  மறையவர் வேள்வியில் வகுத்த அவி* 
    கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து*  கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப* 
    ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று*  உன்னித்து எழுந்த என் தட முலைகள்* 
    மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்*  வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!*             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானிடை - ஸ்வர்க்கலோகத்தில்
வாழும் - வாழுகின்ற
அவானவர்க்கு - விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர் - ப்ராஹ்மணர்
வேள்வியில் - யாகத்தில்

விளக்க உரை

உரை:1

இந்நிலவுலகில் அந்தணர்கள் அனுட்டிக்கும் யாகங்களில் என்று இந்திரன் முதலிய தேவர்கட்குவகுக்கும் புரோடாசத்தை, மிகவும் அற்பஜந்துவாகிய ஒரு காட்டுநரி கிட்டி அந்த ஹவிஸ்ஸைக் காலால் கடந்தும் மூக்கால் மோந்தும் நஷ்டமாக்குவது போல், கண்ணபிரானக்காகக் கிளர்ந்தெழுந்த என் கொங்கைகளை மானிடர்க்கு உரியனவாகப் பேசும் பேச்சொன்று இப்பூமண்டலத்தில் கிளம்புமேயாகில் எனது உயிர் உடனே மாய்ந்துவிடும், அப்பேச்சுத்தானே எனக்கு விஷமாகுமென்று காமனை நோக்கிக் கூறுகின்றாள். இதனால் மநுஷ்யனாய்ப் பிறந்த ஒரு பிள்ளைக்கு ஆண்டாளைத் தாரைவார்த்துத் தரலாமென்ற ஒரு பேச்சு ஒரு காபுருஷன் வாயில்வந்தாலும் அது தனக்கு அஸஹ்ய மெனக்கூறும் முகத்தால் ‘கண்ணபிரா னொருவனையே தான் பதியாகப் பெற விரும்புமாற்றைக் கூறியவாறு. ‘அங்கைத் தைலத் திடையாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று செங்கச்சுக் கொண்டு கண்ணாகிக் காணீர் கோவிந்தனுக்.. கல்லால் வாயில் போகா” என்று மேலும் கூறுவள். தேவர்களுக்கு இட்ட புரோடாசத்தை நரி கெடுக்குமாபோல - என்ற இவ்வுவமையினால் ‘இவளுடைய கொங்கை மானிடர்க்கு உரியன என்னும் பேச்சு உலகிலுண்டானால் பின்பு அம்முலைகள் எம்பெருமானுக்கு ஹேயமா மென்னுமிடம் தோற்றுவிக்கப்படும். அவி-ஹவிஸ் என்ற வடசொல் விகாரம்.

உரை:2

வேதம் ஓதுபவர்களால் வானுலகத்தில் வாழும் வானவர்க்கு என்று  செய்த வேள்வியில் போடப்பட்ட பொருட்களை  (அக்காலத்தில் பசு,ஆடு போன்றவை  வேள்வியில் இடப்பட்டன என்பது மணிமேகலை நூலில் உள்ள வரலாற்றுத் தகவல்), கான் (காட்டில் ) திரியும் நரி வந்து முகர்ந்து பார்ப்பது எவ்வளவு தகாத ஒன்றோ அதைப் போல சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் (ஊன் -உயிர் ) பிறிதொரு மானிடனுக்கு இல்லை என்று ஆவேசமாகச் சொல்றாங்க.. உலகளந்த உத்தமனுக்கே என் உடம்பு அவனுக்கென்றே ஆனவை விம்மி எழுந்த என் பருத்த முலைகள்..என் உடல் சாதாரண மனிதனுக்கென்று பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் மன்மதனே என்று கோபமும் வீராவேசமுமாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

English Translation

O God of Love! These swollen breasts of mine are meant for Krishna, Lord of discus. Like a sneaky jackal from the forest toppling and sniffing the sacrificial Havis that Vedic seers had kept for the gods, if you marry me to a mortal, I shall not live, take note.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்