விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருவு உடையார் இளையார்கள் நல்லார்*  ஓத்து வல்லார்களைக் கொண்டு*  வைகல்- 
    தெருவிடை எதிர்கொண்டு*  பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா* 
    கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்*  கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்* 
    திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்*  திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காமதேவா - மன்மதனே!
உருஉடையார் - அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள் - யௌவன பருவமுடையராயும்
நல்லார் - காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள் - பங்குனிமாதத்துப் பெரிய திருநாளில்

விளக்க உரை

உரை:1

எம்பெருமானை அடிபணிய வேண்டுவோர் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி வேதவித்துக்களான வைதிகரை முன்னிட்டுப் பணிவதுபோல், ராஜஸதேவதையான காமனைக் குறித்து நோன்பு நோற்கைக்கு ஆண்டாள் சில அதிகாரிகளை முன்னிட்டுக் கொண்டு இழியுமாறு கூறுவன, முன்னடிகள். ஒத்து-ஓதப்படுவது ப்ரகரணபலத்தினால் காமஸூத்ரமாகிற வேதத்தை இங்குக்கூறும்’ அதாவது - வாத்ஸ்யாயந சாஸ்த்ரம் தெருவிடை எதிர்கொள்ளுகை - ஆதராதியத்தின் காரியம். திருந்தவே நோற்கின்றேன் என்றது-காமனைத் தொழுகை ஸ்வரூபநாசக மன்றோவென்று இறாய்க்காமல் நோற்கின்றேன் என்றவாறு. கருவுடைமுகில் - நீர்கொண்டெழுந்த காளமேகம். நோக்கு + எனக்கு, நோக்கெனக்கு’ தொகுத்தல் விகாரம்.

உரை:2

உருவிலே இளமையானவர்கள் வேதம் ஓதுபவர்களைக் கொண்டு , அதிகாலையில் (வைகறை -இரவு 2-6 சூரியோதயத்துக்கு முன் ) தெருவினுக்கே வந்து எதிர் கொண்டு வரவேற்று , பங்குனி நாள் நோன்பு நோற்கின்றேன் காமதேவா !கருப்பு நிறம் கொண்ட மேகத்தின் நிறத்தான் ,காயாம் பூ வண்ணன் நிறத்தான்(காயாம்பூ என்பது முல்லை நிலத்து மலராம்..முல்லை நிலத் தெய்வமும் மாலே..) கருவிளம்பூ (சங்குப்பூ ) நிறம் கொண்டான் , தாமரை வண்ணம் கொண்டவன் அந்த அழகிய முகத்தினில் உள்ள திருக்கண்களால் என்னை நோக்கும் பேறு எனக்குக் கிடைக்க அருள் செய்வாய்.

English Translation

O God of Love! Every day I go out and perform the rites of spring, in the company of shapely, young, perfect and adept maidens. Grant that my Krishna, Lord of cloud hue, dark Keya flowers hue will set his bright and beautiful lotus eyes on me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்