விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒருத்தி மகனாய்ப் பிறந்து*  ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 
  தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*  கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* 
  நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,*  உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்* 
  திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*  வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒருத்தி - தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய் - பிள்ளையாய்
பிறந்து - அவதரித்து
ஓர் இரவில் - (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி - யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தியினுடைய

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் மங்களாசாஸநம் பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணபிரான், ‘பெண்காள்! நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஜந்மஸித்தம்; இது கிடக்க, நீங்கள் இக்குளிரிலே உங்களுடலைப் பேணாமல் வருந்திவந்தீர்களே! உங்களுடைய நெஞ்சிலோடுகிறது வெறும் பறையேயோ? மற்றேதேனுமுண்டோ?’ எனவினவ; அது கேட்ட பெண்கள், பிரானே! உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக்கொண்டு வருகையாலே ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு வ்யாஜத்தையிட்டு நாங்கள் உன்னையே காண்! பேறநினையாநின்றோம்’ என்று விடை கூறுவதாய்ச் செல்லும் பாசுரம், இது. அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்தவுனக்கு எங்கள் வேண்டுகோளைத் தலைக்கட்டித் தருவதுமிகவுமெளியதே என்னுங் கருத்துப்படக் கண்ணபிரானை விளிக்கின்றனர், முன் ஐந்தடிகளால். “தேவகி மகனாய்ப் பிறந்து எசோதை மகனாய் ஒளித்துவளர” என்னாமல், ஒருத்தி மகனாய்ப் பிறந்து… ஒருத்தி மகனாய் ஒளித்துவளர” என்றது – அத்தேவகி யசோதைகளின் ஒப்புயர்வற்ற வைலக்ஷண்யத்தை உளப்படுத்தியவாறு. ‘தேவகி கண்ணனைப் பெற்ற பாக்கியவதி. எசோதை கண்ணனை வளர்த்தெடுத்த பாக்கியவதி’ என்று உலகமடங்கலும் புகழும்படியான அவர்களது வீறுபாட்டை, ‘ஒருத்தி’ என்ற சொல்நயத்தால் தோற்றுவிக்கிறபடி. ஒருத்தி – அத்விதீயை என்றபடி

உரை:2

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்

English Translation

O Lord who took birth in anonymity as Devaki’s child, and overnight grew up incognito as Yasoda’s child, you who upset the despot king Kamsa’s plans and kindled fire in his bowels, you are our master. We have come to pay respects to you. Grant us your favour of measureless wealth and blessed service, that we may end our sorrow and rejoice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்