விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்*  நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்* 
  கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்*  வந்து எங்கும் கோழி அழைத்தன காண்*  மாதவிப்- 
  பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்*  பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்* 
  செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப*  வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய். (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உந்து மத களிற்றன் - (தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மதயானை களை யுடையவனும்
தோள் வலியன் - புஜபலத்தை யுடையவமுமான
நந்தகோபாலன் - நந்த கோபானுக்கு
மருமகளே - மருமகளானவளே!
நப்பின்னாய் - ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
 

விளக்க உரை

உரை:1

கன்னிகையின்றிக் கண்ணாலங் கோடிப்பதுபோல், பாதநபூதையான நப்பின்னைப் பிராட்டியைப் பற்றாமல், வழிப்போக்கர்களோடொந்த வாசற்காப்பானையும் நந்தகோபனையும் பலதேவனையும் பற்றுவதனால் பயன் யாது கொல்?” என்று கண்ணபிரான் திருவுள்ளத்திற் கொண்டுள்ளென் என் நினைத்த இவ்வரியப் பெண்டிரு நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் பாசுரம், இது. எம்பெருமானைப் பற்றுவார்க்கு ஒரு புருஷகாராபேக்ஷ உள்ளவாறு போலப் பிராட்டியைப் பற்றுவார்க்கும் ஒரு புருஷகாரம் அபேக்ஷிதமாக வேண்டாவோ? என்னில்’ வேண்டா’ அவளுடைய கருணைத்தானே அவளைப் பற்றுகைக்குப் புருஷகாரமாக வற்றாம்’ நெருப்பை ஆற்றுகைக்கு நீர்வேண்டும்’ நீரை ஆற்றுகைக்கு நீரே பொதுமன்றோ. எம்பெருமானைப் பற்றும்போது பிராட்டிமுன்னாகப் பற்றவேணுமென்று பிரமாணங்கிடக்க, இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவதென்? எனில்’ க்ருஷ்ணாவதாரத்திற்கு இவள் ப்ரதாநமஹிஷியாதலால் இவளைப் பற்றுகின்றனரென்க. (உந்துமதகளிற்றன் இத்தியாதி) கண்ணபிரானைச் சொல்லும்போது “நந்தகோபன் குமரன்” என்று நந்தகோபருடைய ஸம்பந்தத்தை யிட்டுச் சொல்வது போல, நப்பின்னையும் நந்தகோபர்ஸம்பந்தத்தையிட்டுக் கூறுகின்றனர், அவருடைய ஸம்பந்தம் இவளுகப்புக் குறும்பாயிருத்தலால். “உந்துமதகளிற்றன்” என்பதற்கு மதயானைகளை உந்துமவன்-நொறுக்கித்தள்ளுமவன், உந்துகின்ற (பெருக்குகின்ற) மத நீரையுடைய களிறுபோன்றவன், (அல்லது) களிறுகளை யுடையவன் எனப்பொருள்கள் காண்க.

உரை:2

"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும், படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்! கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள் போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!"

English Translation

Open the DOOR, Nappinnai, Daughter-in-law of the mighty Nandagopala who has big elephants. O lady with fragrant looks, look, the cock crows; birds of many feathers chirp sweetly, on the Madavi bower. O Lady with ball clasping slender fingers, pray come and open the door with your lotus hands, your jeweled bangles are jingling softly, that we may sing your husband’s praise with pleasure.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்