விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்*  கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே* 
  காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து*  வாச நறுங் குழல் ஆய்ச்சியர்*  மத்தினால்- 
  ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ*  நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி* 
  கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ*  தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேய் பெண்ணே - மதியெட்ட பெண்ணே!
எங்கும் - எல்லாவிடங்களிலும்
ஆனைச்சாத்தன் - பரத்வாஜ பக்ஷிகளானவை
கலந்து - (ஒன்றோடொன்று) ஸம்ச்லேக்ஷித்து
கீசுகீசு என்று - கீச்சுகீச்சென்று

 

விளக்க உரை

உரை:1

சிலரை உணர்த்திக் கூட்டிக்கொண்டு கண்ணபிரான் பக்கற் போமவர்களன்றே இவர்கள்; நம்மைப் போலவே அமைவரும் நன்மைபெறவேணுமென்னுங் கருத்துடையோரன்றோ. புகவத்ஸம்பந்தம் மெய்யே உண்டாகில் தன் வயிற்றிற் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாறு போலவே அனைவருடைய ஸம்ருத்திக்கும் உகக்கவேணுமன்றே? ஆட்கொண்ட வில்லிஜீயர் எழுந்தருளா நிற்கச்செய்தே நஞ்சீயர் தெண்டனிட்டு நிற்க, “பகவத் விஷயத்தில் ருசி நமக்கு மெய்யே பிறந்ததில்லை காணும்’ என்று ஆட்கொண்ட வில்லிஜீயர் அருளிச்செய்ய, நஞ்சீயர், “உம்மைப்போல் ஆசார்யவான்கள் ஆரேனுமுளரோ? நீர் இங்ஙனே அருளிச்செய்வானென்?” என்று கேட்க; “பாகவதர்களின் ஸம்ருத்தியைக் கண்டு மிக உகக்கையன்றோ பகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கையாவது; அஃது இல்லாமையைப் பற்றச்சொன்னேன் காணும்” என்று ஆட்கொண்ட வில்லிஜீயர் அருளிச்செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு நினைக்கத்தக்கது.

உரை:2

"கீசு கீசு என்று, ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் பேரொலி உனக்கு கேட்கவில்லையா, பேதைப்பெண்ணே! வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் தாலிகள் தள தள என்று ஒலிக்க, மத்தினால் கைகளை மாற்றி மாற்றி தயிர் கடையும் சப்தத்தை கேட்டிலையோ? நம் பெண்கள் கூட்டத்துக்கு தலைமையானவளே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? முகத்தில் பிரகாசம் ஜொலிக்கும் பெண்ணே! எழுந்து கதவைத்திற!

English Translation

Devilish girl! Do you not hear the screeching sounds of grey birds chattering loudly? Do you not hear the churning sound from the butter pail of fragrant haired milkmaids, their bangles and charms jingling merrily as they churn? O Nobly-born girl, do you still lie in bed listening while we stand and sing the praises of Narayanam Kesava? Bright girl! Open the door, quick!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ

 • மேலும் கேட்க
 • குறிப்புகள்


  ....விரைவில்