விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்*  வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ? 
  பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு*  கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி* 
  வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை*  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்* 
  மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளும் - பறவைகளும்
சிலம்பின காண் - (இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யநின்றன காண்;
பன் அரையன் - பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ - ஸ்வாமியான ஸர்வேச்வரனுடைய
இல்லில்- ஸந்நிதியிலே

விளக்க உரை

உரை:1

இப்பாட்டு முதல், மேல் “எல்லேயிளங்கிளியே” என்ற பாட்டளவாகப் பத்துப் பாசுரங்களாலே அநுபோக்தாக்களைக் குறித்துத் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது. திருஷ்ணாநுபவத்திற்குப் பிரதான உபகரணமான கதாலும், ஏகாந்தமான காலமும், கோவலக்கிழவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்திருக்கையாலே அவரவர் தனித்தனியே அநுபவிக்க அமைந்திருக்க, ஒருவரை ஒருவர் சென்றெழுப்புவானென் எனில்; பெருக்காற்றில் இழிவார் துணையின்றி இழியமாட்டாதவாறுபோல’ “காலாழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றும், “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்” என்று மருளிச்செய்தபடி - இழிந்தாரைக் குமிழ் நீரூட்டவல்ல ஆழியானென்னுமாழமோழையில் இழியுமிவர்கள் துணையின்றி இழிய அஞ்சித் துணைகூட்டிக்கொள்வதற்காக ஒருவரை ஒருவர் உணர்த்துகின்றனரென்க. அன்றியும், “ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத” “இன்கனி தினயருந்தான்” என்றபடி சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத்தக்கதல்லாமையால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்கப் பாரிக்கின்றன ரென்றுங்கொள்க.

உரை:2

"உறங்கும் பெண்ணே! பறவைக் கூட்டங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்டாயோ? கருடனை வாஹனமாகக்கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சிக்கு அனைவரையும் அழைக்கும் சங்கின் பெரிய சப்தத்தை நீ கேட்கவில்லையோ? இளம் பெண்ணே! எழுந்திருப்பாயாக. பூதனா என்னும் அரக்கி, தாய் உருவம் கொண்டு, தனது முலைகளில் நஞ்சு தடவிக்கொண்டு, கண்ணனுக்குப் பால் ஊட்டுகையில், அதை அறிந்த கண்ணன், பாலையும் அவள் அளித்த விஷத்தையும் உண்டு, அந்த அரக்கியின் உயிரையும் குடித்தான். பின்னர், வஞ்சனையுடன் வண்டி உருவில் வந்து கண்ணன் மேல் சாய்ந்து கொல்ல முயன்ற சகடாகரன் என்னும் அரக்கனை, தன் சிறு கால்களால் உதைத்து, அவ்வண்டியைக்கவிழ்த்து, அவ்வசுரனைக்கொன்றவனும், திருப்பாற்கடலில் பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் அவனை நினைத்துக்கொண்டு, 'ஹரி, ஹரி' என்று எழுப்பும் பேரொலி, எங்கள் உள்ளத்தில் புகுந்து, குளிர்ந்துள்ளது. அதனைக்கேட்க, நீயும் எழுந்திராய்!

English Translation

Look, the birds have begun their morning song. Child, arise! Do you not hear the great booming sound of the snow-white conch in the temple of Vishnu, king of the birds? He who drained the ogress Putana’s poisoned breasts, and kicked the cart that ran amuck, lies reclining in the Milk Ocean. Sages and Yogis hold him in their hearts and gently rise, uttering ‘Hari’, the deep sound that enters our hearts and makes us rejoice!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்