விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
  இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*
  சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
  செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சக்கரமும் - திருவாழியாழ்வானும்
தட கைகளும் - பெரிய திருக்கைகளும்
கண்களும் - திருக்கண்களும்
பீதக ஆடை யொடும் - திருப்பீதாம்பரமும்
அனத்தம் கடலுள் - அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே

விளக்க உரை

இளைத்திருந்தேனை என்ற விடத்துள்ள இரண்டனுருபைப் பிரித்து, ஏறி என்ற விளையெச்சதோடு கூட்டியுரைத்தோம். இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலுமொன்று. ஸம்ஸார ஸாகரத்தில் ஆழ்ந்துகிடந்து அலமருகைக்கீடான அஜ்ஞாநத்தை நீக்கி ஞானத்தைப் பிறப்பித்தருளியவாறுபோல, உன்திருவடியோடே சேர்த்தியையும் பண்ணியருளவேணும் என்று வேண்டுகின்றார். இப்பாட்டால் அக்கரை என்று பாபத்துக்குப் பெயராதலால், கருவியாகு பெயரால் ஸம்ஸாரத்தை உணர்த்திற்று; (கருவியாகு பெயராவது- காரணத்தின் பெயர் காரியத்துக்கு ஆகுவது; இங்கு, காரணம் பாபம்; காரியம் ஸம்ஸாரம்) அனத்தம் - அபாயம்; மென்னும் வடசொல் திரிந்தது. என்பதனாலும் இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையை அறிக. இக்கரையேறி - பிறவிக் கடலினின்றும் வெளிப்பட்டு என்றவாறு. ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று துளங்கின அடியேன் உனது நிர்ஹேதுக கிருபையினால் அக்கடலைக் கடந்தேனாகிலும், நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தைச் சிக்கனப் பிடித்தாலன்றி என் அச்சம் தீராதாகையால், ‘ஸ்வதந்திரனான ஈச்வரன் மீண்டும் நம்மை ஸம்ஸாரக்கடலில் தள்ளினாற் செய்வதென்?’ என்று மிகவும் பயப்படா நின்றேனாகையால், இவ்வச்சந்தீரும்படி அபயப்ரதாநம் பண்ணியருளவேணுமென்றவாறு. இதனால், ஸம்ஸாரதசை என்றும், ஸம்ஸாராதுத்தீர்ணதசை என்றும், பரமபதப்ராப்திதசை யென்றும் மூன்று தசைகள் உண்டென்பதும், அவற்றுள் இப்போது ஆழ்வார்க்குள்ள தசை மத்யமதசையென்னும் பெறுவிக்கப்பட்டதாகும். உன்பேர்ருளால் என்றவிடத்து, என்பது அநுஸந்திக்கத்தகும். (அஞ்சேலென்று கைகவியாய்.) என்று அர்ஜுநனை நோக்கி அருளிச்செய்தபடி அடியேனையும் நோக்கி அருளவேணுமென்கிறாரெனக்கொள்க. என்று பரதன் கூறிய அபயமுத்ராலக்ஷணச்லோகத்தில், என்றதனால், கைவிரல்கள் மேல்முகமாக விரிந்திருக்க வேண்டுவது அபயமுத்திரையின் இலக்கணமாகத் தெரிதலால், இங்குக் கைகவியாய் என்கிற விதனை அதற்குச்சேர ஒருவாறு ஔபசாரிகமாக நிர்வஹித்துக்கொள்ள வேணும், அஞ்சே லென்று கைகவியாய் – அபயமுத்திரையைக் காட்டியருளாய் என்று இங்ஙனே திரண்டபொருள் கொள்வது ஏற்குமென்க, அன்றி வேறுவகை உண்டேல் உற்றுணர்க. “***“ என்ற நியாயத்தின்படி) அஞ்சேல் என்னும்போதைக்கு அச்சம் இன்றியமையாத்தாகையால், அவ்வச்சமாவது – “மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சி“ “(கொள்ளக்குறையாத இடும்மைக்குழியில் தள்ளிப்புகப் பெய்திகொலென்றதற்கஞ்சி“ என்றிப்புடைகளிலே திருமங்கையாழ்வார்க்குப் பிறந்த அச்சம் போன்ற அச்சம் எனக்கொள்க.

English Translation

Not even Siva or Brahma or anyone else known of a medicine to cure the sickness of rebirth. O Dark gem-hued Lord, who appeared as the healer Dhanvantri, pray cut asunder my rebirth and directs me to the portals of your grand temple. O Lord of Tirumalirumsolai, O My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்