விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 
    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மைத்துனன் மார்களை - உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து - வாழச்செய்து
மாற்றவர் நூற்றுவரை - (அவர்களுக்குச்) சத்துரக்களாகிய துரியோதநாதியர் நூறுநுபேரையும்;
கெடுத்தாய் - ஒழித்தருளினவனே!
சித்தம் - (எனது) நெஞ்சானது

விளக்க உரை

இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், நேற்றைக்கென்றும் இப்படி சொல்லிக்கொண்டு கழித்தகாலம் முழுவதையும் பாழே போக்கினேன்; ஏதோ சிறிது ஸுக்ருத விசேஷத்தினால் இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னைவிட்டுப் புறம்புபோகப் புக்கால், அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன்; எனக்கு உன்திறத்து இவ்வகை அபிநிவேசம் பிறக்கைக்கீடாக, என் நெஞ்சு உன்னைவிட்டு மற்றொன்றை நினைப்பதேயில்லை யென்னுமிடத்தை ஸர்வஜ்ஞனான நீ அறியாநின்றாயன்றோ? என்கிறார். “பழுதே பல பகலும் போயின்வென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு தொழுதேன்” என்ற பொய்கையார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. (இன்றொடு நாளையென்றே) ‘நேற்றுப்போனேன், இன்று வந்தேன், நாளைக்குப் போகப்போகிறேன்’ என்றிப்படி வ்யவஹரித்துக்கொண்டு கழிக்குங் காலத்திற்குக் கணக்கில்லையிறே. “கிறியே மாயம்” என்ற நிகண்டின்படி, கிறி என்ற சொல் மாயப்பொருளதாகையால், ‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது ஒக்கும்;

English Translation

I floundered on the other shore of a senseless ocean. By your boundless grace, I have come over to this shore, tired. You do not lift your hand and say to me, “Fear not”. O Lord of Tirumalirumsolai, with discus-bearing mighty arms, big eyes, yellow vestments and crimson hue of the evening-sky, O My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்