விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சித்திரகுத்தன் எழுத்தால்*  தென்புலக்கோன் பொறிஒற்றி* 
  வைத்த இலச்சினை மாற்றித்*  தூதுவர் ஓடிஒளித்தார்*
  முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்*  மூதறிவாளர் முதல்வன்* 
  பத்தர்க்கு அமுதன்அடியேன்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தென் புலம் கோன் - தெற்குத்திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி - மேலெழுத்தை இடுவித்து
எழுத்தாய் வைத்த - (தான்) எழுதிவைத்த
இலச்சினை - குறிப்புச்சீட்டை
தூதுவர் - யமகிங்கரர்கள்

விளக்க உரை

கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல்குறுகச் சென்றாலெற்றி நமன்றமர்பற்றும்போது, நில்லுமினென்னுமுபாயமில்லை” என்ற குறைதீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச்செய்கிறார், இப்பாட்டில் யமலோகத்தில், இவ்வுலகத்தின்கணுள்ள ஸர்வாத்மாக்களினுடையவும் பாபங்களைக் கணக்கிட்டு எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தனென்னுங் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத்தன்மையால் ஸூரியன் சந்திரன் வாயு அக்நி ஆகாசம் பூமி வருணன் ஹ்ருதயம் யமன் பகல் இரவு காலை மாலை தருமம் என்ற பதினான்குபேர் ஸாக்ஷியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையு மெழுதிவைப்பதுபோல ஒரு சுவடியில் என் தீவினைகளையுமெல்லா மெழுதி, அதன்மேல் யமனுடைய மேலெழுத்தையுமிடுவித்து அதனைப் பாதுகவாலாய் வைத்திருக்க, அதனை யமதூதர்கள் எடுத்துச் சுட்டுப்போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; இதற்கு அடி என்னெனில்; அயர்வறுமமாக்கனதிபதிக்கு நான் அடிமைப்பட்டதேயாகும். அது காரணமாக எனது ஆத்துமா அவ்வெம்பெருமானுடைய பாதுகாப்பை பெற்றிருக்கின்றபடியால் அவ்யமதூதர்கட்கு என்னை அணுகும்வழி என்னவே மென்றவாறு.

English Translation

Chitragupta’s verdict with the stamp affixed by Yama, King of the Southern Quarter, has been quashed; the messengers of death have fled. The lord who reclines in he pearly ocean, Lord of enlightened sages, the ambrosial delight of devotees, has made me his. No more like old, the fortress, is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்