விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
    கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*
    மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
    பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெய்க்குடத்தை - நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி - பற்றிக்கொண்டு
ஏறும் - (அக்குடத்தின்மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல் - எலும்புகளைப் போல்
எங்கும்மிரந்து - என்னுடைய உடம்பு முழுவதும் பாலி

விளக்க உரை

உரை:1

அந்நிஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை ஆக்கிரமித்துக்கொண்டு, நான் உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு சாச்வதப்ரதிஷ்டையாக நின்றின்ற நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று; இத்தனை நாளும்போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளிகொண்டிருக்குமிடமாயிற்று இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை; இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள். “பாம்பனையோடும் வந்து புகுந்துகிடந்தார்” என்றதனால், நித்யவாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும். பட்டினம்- வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.

உரை:2

நெய்க்குடத்தில் ஏறும் எறும்புகள் போல் என்னைக் கைப்பற்றிக் கொண்ட நோய்களே பிழைத்து ஓடிச் செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தம் பாம்பணையோடு குடிவந்து விட்டான். முன்போல இல்லை இந்த உடல். பட்டினம் காவலுடையது. பத்திரமானது.

English Translation

O Ye sicknesses that plague the soul like a swarm of ants over a pot of Ghee! Flee and save yourselves. The Lord of the Vedas has entered my body and made it his abode, reclining on a serpent bed. No more like old, the fortress is on guard!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்