விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முற்றிலும் தூதையும்*  முன்கைமேல் பூவையும்* 
  சிற்றில் இழைத்துத்*  திரிதருவோர்களைப்*
  பற்றிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
  நெற்றி இருந்தவா காணீரே* 
  நேரிழையீர்! வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சிற்றில் - சிறுவீடுகளை (மணலினால்);
இழைத்து - செய்துகொண்டு;
திருதருவோர்களை - விளையாடித்திரியும் சிறு பெண்களை;
பற்றி - (வலியக்) கையைப் பிடித்துக்கொண்டு (அவர்களுடைய) ;
முற்றிலும் - (மணல்கொழிக்கிற)சிறு சுளகுகளையும்;

விளக்க உரை

உரை:1

மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடும் சிறு பெண்களைப் பிடித்து அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் மணல் கொழிக்கும் சிறு முறத்தையும் (முற்றில்) மணல் சோறு ஆக்குகின்ற சிறு பானைகளையும் (தூதை) அவர்கள் கைகளில் கொஞ்சும் சிறு பறவைகளையும் (பூவை) பறித்துக் கொண்டு ஓடும் குறும்பில் தலைவனான கண்ணனின் நெற்றியின் அழகைக் காணுங்கள்! சிறந்த அணிகளை அணிந்த பெண்களே காணுங்கள்!

உரை:2

கண்ணபிரான் அவதரித்த பதின்மூன்று பதினான்கு நாள்களுக்குள் ஊர்ப்பெண்களை யழைத்து அவயவ ஸௌந்திரியத்தை யசோதைப் பிராட்டி காட்டின பாசுரமாக இத்திருமொழி அமைந்ததாயினும், பிறகு நடந்த பால சேஷ்டிதங்களையும் இவ்வாழ்வார் அறிந்தவராகையாலே அவற்றையும் கண்ணபிரானுக்கு விசேஷணமாக்கி யருளிச்செய்கிறார். சிறுபெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பது வழக்கம். அதாவது தெருக்களில் கொட்டியிருக்கும் மண்ணையும் கல்லையுங்கொண்டு வீடு கட்டுவது போற் செய்து விளையாடுகை. அதற்கு மணல் கொழிக்கச் சிறுமுறம் வைத்துக் கொண்டிருப்பார்கள். மணற்சோறு சமைக்கச்சிறு பானையும் வைத்துக் கொண்டிருப்பார்கள்! தவிரவும், அப்பெண்கள் கொஞ்சி விளையாடும் பொருட்டுத் தங்களது முன்னங்கை மேல் நாகணவாய்ப்பிக்ஷியையும் வைத்துக்கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் பலாத்கரமாக பறித்துக் கொண்டு பிடிகொடாமல் ஓடுகின்ற தீம்பனாம் கண்ணபிரான். அப்படிப்பட்ட இவனுடைய நெற்றியானது அங்ஙனம் ஓடுகின்ற ஆயாஸத்தினால் குறுவியர்ப்புத் தோன்றி அழகாயிருப்பதைக் காணுங்கோளென்று காடுகிறபடி. முற்றில் - சிறுமுறம். ‘முச்சல்’ என்று சிறுவர்களின் வழக்கச் சொல்.

English Translation

O Ladies with excellent jewels, come here and see the forehead of the Lord. He snatches the winnow plates, pots, and palm-leaf dolls from girls playing ‘house’ in the sand, and runs away.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்