விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அழகிய பைம்பொன்னின்*  கோல் அங்கைக் கொண்டு* 
  கழல்கள் சதங்கை*  கலந்து எங்கும் ஆர்ப்ப* 
  மழ கன்றினங்கள்*  மறித்துத் திரிவான்* 
  குழல்கள் இருந்தவா காணீரே* 
   குவிமுலையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அழகிய - அழகியதும்;
பைம் பொன்னின் - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான;
கோல் - மாடு மேய்க்குங் கோலை;
அம் கை - அழகிய கையிலே;
கொண்டு - பிடித்துக் கொண்டு;

விளக்க உரை

உரை:1

அழகிய பசும் பொன்னால் செய்யப்பட்ட கோலை அழகிய திருக்கையிலே வைத்துக் கொண்டு, திருவடிகளில் அணிந்திருக்கும் வீரக்கழல்களும் சதங்கையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒலிக்க, ஓடி ஓடி இளைய பசுங்கன்றுகளை ஓடவிடாமல் மறித்துத் திரிகின்றவனுடைய திருமுடிக்கற்றைகளின் அழகினைக் காணுங்கள். குவிந்த முலைகளை உடைய பெண்களே வந்து காணுங்கள். 

உரை:2

கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய்ப் பசும்பொன்னாலே செய்யப்பட்டதான கோலை கன்றுகளை மடக்கி மேய்ப்பதற்குக் கருவியாகக் கையிலே கொண்டும், கன்றுகளை மடக்குவதற்காக ஓடுகையாலே திருவடிகளிலே சாத்தியிருக்கிற வீரத்தண்டைகளும் சதங்கைகளும் ஒன்றோடொன்று கலந்து எங்கும் ஒலிக்கவும், இளங்கன்றுகளின் கூட்டங்களைச் சிதறிப் போகவொட்டாமல் மடக்கி மேய்க்கின்ற கண்ணபிரானுடைய அசைத்தலைந்து விளங்குகின்ற திருக்கேச பாசங்களின் அழகைக் காணுங்கள் என்று - பாதாதி கேசாந்தமாகக் காட்டித் தலைக்கட்டிற்றாயிற்று. .

English Translation

O full-breasted Ladies, come here and see the curly locks of this child. He rounds up a herd of young calves and goes roaming with a golden staff in his beautiful hands, his sandals and his anklets striking a merry jingle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்