விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
  இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*
  மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
  சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிறப்பு அகத்தே - ஸூதிகாக்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த - இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும் - புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில் - ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து

விளக்க உரை

இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்யவுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின் உரையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகுபெயரால் விருந்தினரை உணர்த்துகிறது.

English Translation

Vedic seers of eminence, who perform fire-sacrifices and respectfully offer food to unexpected guests, reside in Tiru-Arangam. It is the abode of the Lord who is a trice brought back the four infants, --that had died in the delivery room, and restored them to their parents.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்