விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
    உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 
    திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
    பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மருமகன் தன் - மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை - புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு - மறுபடியும்  உயிர்மீட்டு
மைத்துனன் மார் - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு - சரீரமானது

விளக்க உரை

பண்டு பாரதப்போரில், அர்ஜுனன் மகனான அபிமந்யுவின் மனைவியாகிய உத்தரை என்பவருடைய கருவைநோக்கி அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட அபாண்ட வாஸ்திரத்தினால் அக்கருவிலிருந்த சிசு (பரிக்ஷித்) நீறாயொழிய, அச்சிசுவை மீண்டும் உயிர் பெறுத்த வேணுமென்று ஸுபத்திரையினால் பிரார்த்திக்கப்பட்ட கண்ணபிரான் தனது செந்தாமரை மலர்போன்ற திருவடியினால் அச்சிசுவை உயிர்பெற்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டது. இவ்வரலாறு மஹாபாரதத்தில் ஆச்வமேதிகபர்வத்துக்கு உள்ளீடான அநுகீதாபர்வத்தில் ***- அத்தியாயங்களிற் பரக்கக் காணத்தாக்கது. அபிமந்யு என்பவன் கண்ணபிரானுக்கு உடன் பிறந்தவளான ஸுபத்தையின் மகனாதலால் மருமகனாயினன். சந்ததி- வடசொல்லிகாரம். (மைத்துனன்மார் இத்யாதி.) பஞ்சபாண்டவர்களுக்கு தான் துணையாய் நின்று, கௌரவர்களால் அவர்கட்கு ஒரு நலிவு நேராதபடி பலவகைகளாயல் காத்தருளிமமையைக் கூறியவாறு. இரண்டாமடியில், “மகத்தே” என்றவிடத்து, மகம்- வேமென்ற வடசொல் விகாரம்: யாகமென்பது பொருள்; சந்தர்ப்பம் நோக்கி, நரமேதயாகமென்று உரைக்கப்பட்டது; மநுஷ்யர்களைப் பலிகொடுத்து நடைபெறும் யாகம்- நரமேதயாகமெனப்படும். “எல்லாச்சேனையு பிருநிலத்தவித்த” என்றபடி உபயஸேனையிலும் பூமிக்குச் சுமையாயிருப்பவர்களையெல்லாம் ஒழிப்பதாக நடத்தப்பட்டதும், *மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனுடைய திருவுள்ளத்திற்கு உகப்பாயிருப்பதுமான பாரதயுத்தத்தை நரமேதயாகமாகக் கூறுவது ஏற்குமென்ப. பகவத்கீதை முதலியவற்றால் ஆசார்யத்வம் தோற்ற ஹிதோபதேசம் பண்ணினபடியைப் பற்றிக் “குருமுகமாய்க் காத்தான்” என்றருளிச் செய்தனரென்க. குருமுகம்- ***- பின்னடிகளின் கருத்து- திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகாநின்ற காவிரி நீரில், பெரிய பெருமானது திருமுகம்போன்ற செந்தாமரை மலர்களும், அவரது திருமேனி நிறம்போன்ற கரு நெய்தல் பூக்களும் பரபாகத்தாலே ஒன்றுக் கொன்று எதிர்பொருகிற முகத்தை யுடைத்தாய்க்கொண்டு விகஸிக்குமென்று நீர்வளஞ் சொல்லியவாறு. (பொருமுகமாய்) குவளையும் கமலமும் எம்பெருமானது திருநிறத்தோடும் திருமுகத்தோடும்

English Translation

Red lotuses with a hue like Lord’s face and blue-water-lilies with a hue like the Lord’s frame blossom densely, rubbing against one another in the waters of Tiru-Arangam. It is the abode of the Lord who revived Parikshit, the son of his nephew Abhimanyu, and gave

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்