விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தவம் தரும் செல்வம் தகவும் தரும்,*  சலியாப்பிறவிப்-
  பவம் தரும்*  தீவினை பாற்றித் தரும்*  பரந்தாமம் என்னும்-
  திவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*
  உவந்தருந்தேன்,*  அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தீது இல் இராமாநுசன் - எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்;
தன்னை சார்ந்தவர்கட்கு - தம்மைவந்து அடைந்த வர்களுக்கு;
தவம் தரும் - சரனாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை - நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடுவினைகளை;
பாற்றி தரும் - போக்கடித்தருள்வர்;

விளக்க உரை

இப்பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது. இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்; மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்குமட் வினைமுற்றுக்கள். “சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள். பவம். வடசொல். பரந்தாம. வடசொல். திவம். வடசொல் விகாரம்.

English Translation

To all those who seek refuge in him, our Ramanuja gives the fruits of his penance, wealth and compassion, and ends the misery of repeated karmic births, then grants the high seat of Vaikunta. Other than singing his glory, my heart does not rejoice in anything.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்