விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கட்டப் பொருளை மறைப்பொருள் என்று*  கயவர்சொல்லும்- 
  பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,*  என் பெரு வினையைக்-
  கிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி* 
  வெட்டிக் களைந்த*  இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கிட்டி - அடியேன் பக்கல் வந்து நெருங்கி;
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி - தம்முடைய கிருபையாகிற அழகியவாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்);
என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த - எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த;
இராமாநுசன் என்னும் மெய் தவன் - எம்பெருமானாரென்கிற மாமுனிவர் எப்படிப்பட்டவரென்றால்;
கயவர் - துஷ்டர்களான குத்ருஷ்டிகள்;

விளக்க உரை

கட்டம்-கஷ்டம்; கட்டப்பொருளொன்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி; மதாந்தரஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க. கயவர்-நீசர், துஷ்டர் பெட்டு = பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப்பேச்சு. மெய்த்தவன்-தவமாவது சரணாகதியோகம்.

English Translation

Drawing out his shining sword called grace, the great Tapasvi Ramanuja came to me and cut as under the over growth of Karma by the roof. Is he not also our lord who silences the babble of wicked ones, who pass off bad Sastras in the name of Vedic literature?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்