விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்*  தன் குணங்கட்கு
  உரியசொல் என்றும்*  உடையவன் என்றென்று*  உணர்வில் மிக்கோர்-
  தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்*  மறை தேர்ந்துலகில்-
  புரியும் நல்ஞானம்*  பொருந்தாதவரை பொரும் கலியே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெரியவர் பேசிலும் - ஞானசக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்;
பேதையர் பேசிலும் - ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்;
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று - தனது திருக்குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பலகாலுஞ் சொல்லி;
உணர்வில் மிக்கோர் தெரியும் - சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற;
வண் கீர்த்தி - திவ்யகீர்த்தியை யுடையரான;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ளவாரியை வாய்மடுத்து. உண்டு கொண்டேன்” என்றும் “அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள் முதற்சொன்ன விஷயமே (அதாவது-ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கு பக்தனாயிருப்பதே) எனக்குள் சிறந்த உத்தேச்யமென்றாகிறார் இதில். (பெரியவர் பேசிலும் இத்யாதி) இதன் கருத்து யாதெனில்-எம்பெருமானாருடைய திருக்குணங்களை மஹா ஞானிகள் தாம் பேசி முடிக்கவல்லவர்கள்; அற்பஞானிகள், நம்மால் பேசமுடியாதென்று பின்வாங்கக் கூடியவர்கள்; என்பதில்லை; “ தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்றும் “பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாசமலர்த்துழாய் மாலையான் -வடிவு” என்றும் சொன்னாற்போல, பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர் களுடைய யோக்யதைக்குத் தக்கபடி சொல்லித் துதிக்கத்தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்துகொண்டு, நாம் நமது சக்திக்குத்தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை. அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து அவ்வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலிதோஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று.

English Translation

Those who have known Ramanuja praise him, "Whether he talks to learned ones or whether he talks to unlearned ones, he always has a good word to say for each", thus and thus. The selective wisdom of the Vedas that he has given to the world is worth cherishing. Those who do no, do so will only know the paint of kali.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்