விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,*  அதன் உச்சிமிக்க-
  சோதியை*  நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*
  பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*
  பாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு*  யாதொன்றும் பற்றில்லையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய் - அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்
உட்பொருளாயும்;
அதன் உச்சி மிக்க சோதியை - அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந்நாராயணனை;
நாதன் என அறியாது - ஸர்வ சேஷி யென்று தெரிந்துகொள்ளாமல்;
உழல்கின்ற தொண்டர் - பண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய;
பேதைமை - அவிவேகத்தை;

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்கு கலியன் கொடுமையினால் ஒருகாலத்தில் மாறிவிடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ, அப்படி நினைக்கவேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கலிபுருஷன் ஒரு கொடுமையும் செய்யமுடியாதவன்; மற்றவர்களைத்தான் கலிபுருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் நெடுநாளளவும் நிலைநிற்கக் கூடியதே என்றாராயிற்று.

English Translation

O, the folly of those who go about studying the Vedas, but never realise that their subtle essence or inner substance is the most effulgent lord, the master of the Universe! For them and for others Ramanuja showed the path. Those who worship him are my masters. My heart desires nothing save service to their feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்