விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடியைத் தொடர்ந்துஎழும் ஐவர்கட்காய்*  அன்று பாரதப்போர்- 
  முடியப்*  பரிநெடுந் தேர் விடுங்கோனை*  முழுதுணர்ந்த-
  அடியர்க்கு அமுதம் இராமானுசன்  என்னை ஆளவந்து*  இப்- 
  படியில் பிறந்தது*  மற்றுஇல்லை காரணம் பார்த்திடிலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று ,- முற்காலத்தில்;
அடியை தொடர்ந்து - திருவடிகளை அவலம்பித்து;
எழும் - செருக்கிக்கிளர்ந்த;
ஐவீர்கட்கு ஆய் - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷபாதம் பூண்டு);
பாரதப் போர் - பாரதயுத்தத்திலே;

விளக்க உரை

சிறு வயது முதலேயே வ்யாஸபகவான், குந்தி, மார்க்கண்டேயன் ஆகியவர்கள் கூறி வந்த அறிவுரைகளைக் கேட்டுவந்த பாண்டவர்கள் செய்தது என்னவென்றால் – தங்களுக்கு ஆபத்து வந்தபோது உதவி செய்தபடி இருந்த கண்ணனை, சாதாரண மனிதன் என்று எண்ணாமல், தங்களைக் காப்பாற்றும் பரம்பொருள் என்றே கொண்டனர். அவனது திருவடிகளை மட்டுமே பற்றியபடி ருத்ரன், இந்திரன் ஆகியவர்களை வென்று, இந்த உலகில் தங்களுக்கு யாரும் நிகரில்லை என்றபடி பாண்டவர்கள் இருந்தனர். இவர்கள் ஒரு காலகட்டத்தில் துரியோதனன், கர்ணன், சல்லியன் போன்ற தீயவர்கள் அனைவராலும் தனிமைப்படுத்தப் பட்டபோது, தன்னை அல்லாமல் வேறு கதி இன்றி நிற்பதைக் க்ருஷ்ணன் கண்டான். அப்போது நிகழ்ந்த மஹாபாரத யுத்தம் பாண்டவர்களுக்குச் சாதகமாக முடியும் விதமாக, தனது ஸ்வாமித்வம் அனைவருக்கும் தெரியும்படி, உயர்ந்த தேரில் தானே சாரதியாக அமர்ந்தான். இந்தக் கண்ணனை – அவனது ஸ்வரூபம், ரூபம் ஆகியவற்றுடன் சேர்த்து உணர்ந்தவர்கள் ஆழ்வான், ஆண்டான்பிள்ளான், எம்பார் போன்றவர்கள் ஆவர். இவனது தன்மை எப்படிப்பட்டது என்றால் – தந்தை வசுதேவன் சொல் கேட்டு, நான்கு திருக்கரங்களை மறைத்து, இயல்பான தோற்றம் எடுத்தான்; யமுனை நதி முழுவதையும் தனது திருவடிகளால் தூய்மைப்படுத்தினான்; ஆய்ச்சி கைகளால் உரலில் கட்டுண்ண்டு நின்று அடி வாங்கினான்; பூதனை, சகடன், அரிஷ்டன், ப்ரலம்பன், தேநுகன், காளியன், கேசி, குவலயாபீடம், சாணூரன், கௌஸலன், கம்சன் ஆகிய விரோதிகளை அழித்தான்; அக்ரூரர் போன்றவர்களுக்கு அனுக்ரஹம் செய்தான்; கோவர்த்தன மலை எடுத்தல் போன்ற வியப்பான செயல்களைச் செய்தான்; பாண்டவர்களுக்காக சமாதான ஓலையை எடுத்துக்கொண்டு தூது சென்றான்; சாரதியாக அமர்ந்து விச்வரூபம் எடுத்தான்; அர்ஜுனனிடம் உயர்ந்த சாஸ்திரத்தை வெளியிட்டான் – இப்படிப்பட்ட இவனது உயர்ந்த திருக்கல்யாண குணங்களில் பலரும் தோற்று, தங்களை அவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்தனர். இப்படிப்பட்டவர்களுக்கு அமிர்தம் போன்று உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட யதிராஜர், என்னைத் தனது அடிமை என்று கொள்வதற்காகவே இந்தப் பூமியில் திருஅவதாரம் செய்தார். இதனைத் தவிர இவரது அவதாரத்திற்கு வேறு காரணம் இல்லை.

English Translation

Then in the yore the lord drove the steed-driven chariot for the five devoted Pandavas in the Bharata war. Now he has taken birth again as Ramanuja, the sweet ambrosia of devotees, for my upliftment alone, I can see no other reason.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்