விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,*  இப் பார்முழுதும்- 
  போர்த்தான் புகழ்கொண்டு*  புன்மையினேன் இடைத்தான் புகுந்து*
  தீர்த்தான் இருவினை தீர்த்து*  அரங்கன் செய்ய  தாள்இணையோடு- 
  ஆர்த்தான்*  இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பதைப்ப பார்த்தான் - திருக்கண் செலுத்தினார்;
இப்பார் முழுவதும் - இப்பூமண்டலம் முழுவதையும்;
புகழ் கொண்டு - தமது கீர்த்தியினாலே;
போர்த்தான் - மூடிவிட்டார்;
புன்மையினேனிடை - நீசனான அடியேன் பக்கலிலே;

விளக்க உரை

பௌத்தம், சார்வாகம், சாக்கியம், உலூக்கியம், பாசுபதம் மற்றும் காணாபத்யம் ஆகிய ஆறு பிரிவுகளும் அழியும்படிப் பார்த்தார். இவ்விதம் செய்தது மூலம், இந்த உலகில் உள்ள பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை உள்ள அனைவரும் போற்றும்படி தனது புகழ் அனைத்துத் திசைகளிலும் பரவும்படி விளங்கினார். அன்றாடம் செய்யும் பாவங்களே ஒரு வடிவு எடுத்து நிற்பது போன்ற என்னுடைய மனதில் புகுந்தார். இதன் மூலம் எத்தனை ப்ராயச்சித்தம் செய்தாலும் தீர்க்க இயலாத எனது வினைகள் மற்றும் பாவங்களைத் தீர்த்து வைத்தார். இவ்விதம் எனது பாவங்களை நீக்கிய பின்னர், “எளிதில் அடைய இயலாத பரமபதம் சென்று நிலைப்பாய்”, “யோக மார்க்கத்தில் ஈடுபடுவாய்”, என்றெல்லாம் கடினமான செயல்களை எனக்கு உபதேசிக்கவில்லை. மாறாக, நான் இருந்த உலகில் உள்ள பெரியபெருமாளான திருவரங்கனின் திருவடிகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்படுத்தினார். இவை அனைத்தும், என் போன்ற பாவம் நிறைந்தவர்களுக்காகவே அவதரித்த எம்பெருமானார் செய்யும்

English Translation

With his Darsanas. Ramanuja drove out the six heretic thoughts, and spread his fame for and wide. He entered my lowly heart and ended my twin, Karmas, then linked me to the lotus feet of Ranganathan. These are a few of his wondrous deeds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்