விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுரக்கும் திருவும் உணர்வும்*  சொலப்புகில் வாய‌முதம்- 
    பரக்கும் இருவினை பற்றற‌ ஓடும்*  படியில்உள்ளீர்- 
    உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியை* 
    துரக்கும் பெருமை*  இராமானுசன் என்று சொல்லுமினே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருவும் - பக்திப்பெருஞ்செல்வமும்;
உணர்வும் - ஞானமும்;
சுரக்கும் - மேன் மேலும் பெருகும்;
சோல புகில் - அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே;
வாய்  அமுதம் பரக்கும் - வாக்கிலே அம்ருதரஸம் வியாபிக்கும்;

விளக்க உரை

உரை:1

உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார். ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள், எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப்பெறமாட்டான்; அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்; உங்களுக்கும் ஜ்ஞாநபக்திகள் தலையெடுக்கும் பாவங்களும் தொலையும். அத்திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள். உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல். நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது. கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில் “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம்பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க. இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.

உரை:2

எம்பெருமானார் அவதரித்ததால் புண்ணியம் செய்த இந்தப் பூமியில் வசிப்பவர்களே! இத்தனை காலமாக உலக விஷயங்கள் மட்டுமே உண்மை என்று திரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, இதே போன்ற நிலையில் இருந்து எம்பெருமானாரால் திருத்தப்பட்ட நான் உபதேசிக்க உள்ளேன். தர்மம் என்பது தழைப்பதையே பொறுத்துக் கொள்ள இயலாமல், தான் மட்டுமே விளங்கும்படி இருப்பது இந்த கலிகாலமாகும். இத்தகைய கலியை, அந்தக் கலிபுருஷனுடன் சேர்ந்து அதர்மங்களையும் ஓடிவிடச் செய்யும்படியான அதிசயம் ஒன்று உண்டு. அது “இராமானுசா”, என்று எம்பெருமானாரின் திருநாமத்தைக் கூறுவதே ஆகும். எம்பெருமானின் திருநாமங்கள் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை – ஒருமுறை உடையவரின் திருநாமத்தைக் கூறினாலே போதுமானது. இதனால் நிகழ்வது என்ன? எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் ஸம்பத்து, அவன் மீது பக்தி என்னும் ஸம்பத்து, பகவத்ஞானம் என்னும் ஸம்பத்து ஆகியவை உண்டாகிவிடும். இந்தத் திருநாமத்தைக் கூறும்போது நாக்கில் அமிர்தம் சுரந்தபடி இருக்கும். எந்தவிதமான ப்ராயச்சித்தம் செய்தாலும் நீங்காமல் உள்ள பாவங்கள், தோஷங்கள் அனைத்தும், இந்தத் திருநாமத்தைக் கூறிய உடனேயே, வேருடன் களையப்பட்டுவிடும்

English Translation

O People of world! I shall tell you a great way to get rid of the soul-devastating kali, say, "Ramanuja" Even as you do, brightness will dawn on your mind, you mouth will swell with nectar, and all the travails of birth and death will flee.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்