விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சொல்லார்  தமிழ்ஒரு மூன்றும்*  சுருதிகள் நான்கும்எல்லை- 
  இல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்*  எண்ணருஞ்சீர்- 
  நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு* 
  அல்லார் அகல்இடத்தோர்,*  எது பேறென்று காமிப்பரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தெரிந்தவன் - அறிந்தவராயும்;
எண் அரு சீர் - எண்ண முடியாத குணங்களையடையவராயும்;
நல்லார் பரவும் - ஸத்துக்களான் துதிக்கப்படுபவராயு மிருக்கிற;
இராமாநுசன் - எம்பெருமானாருடைய;
திருநாமம் - திருநாமத்தை;

விளக்க உரை

அநந்தா என்றும், விபுலா என்றும் அழைக்கப்படும் இந்த அகண்ட பூமியில் உள்ள மனிதர்களுக்கு உயர்ந்தவற்றை நான் உபதேசித்தாலும், அவர்கள் அதில் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பார்கள்; அறிவு கெட்டு திரிவார்கள்; நாம் சரணம் அடையும் இடம் எது என்று தேடியபடி, அங்கும் இங்கும் செல்வார்கள்; இப்படியாகத் தங்கள் வாழ்வை வீணடிப்பார்கள். மேலும் இவர்கள் செய்வது என்ன? தமிழ் மொழியில் உள்ள இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கொண்டதாகவும், சொற்கள் என்னும் மாலைகள் உடையதாகவும் உள்ள தமிழ்; நான்கு வேதங்கள்; எண்ணற்றதும், எல்லையற்றதும் ஆகிய தர்ம நெறிகள் ஆகியவற்றை அறிந்தவர் எம்பெருமானார்; எண்ணற்ற திருக்கல்யாண குணங்கள் கொண்டவர்; மிகவும் உயர்ந்தவர்களால் சூழப்பட்டவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருநாமத்தை ஒருமுறை நான் உபதேசிப்பதைக் கேட்டு, உச்சரித்தாலே போதும், இவர்களின் தேடுதலுக்கு விடை கிட்டும் – ஆனால் செய்ய மறுக்கிறார்களே!

English Translation

The good ones praise Ramanuja as the knower of the countless paths of righteousness fought by all religious. He is a master of the four Vedas, and well-vesed in the three aspects of sweet Tamil –poetry, music and drama. For those who do not learn his name with faith, what great purpose awaits them in this world?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்