விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேமநல் வீடும் பொருளும் தருமமும்*  சீரியநற்- 
    காமமும் என்றிவை  நான்கென்பர்*  நான்கினும் கண்ணனுக்கே- 
    ஆமது  காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்* 
    வாமனன் சீலன்*  இராமானுசன் இந்த மண்மிசையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருளும் - அர்த்தமும்
தருமமும் - தர்மமும்
சீர்ய நல்காமமும் - மிகவுஞ் சிறந்த காமமும்
என்ற இவை - ஆக இப்படி சொல்லப்பட்டுள்ள இவை
நான்கு என்பர் - நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;

விளக்க உரை

மோக்ஷம் என்பதும், அயோத்யை மற்றும் அபராஜிதா என்றும் கூறப்படும் பரமபதம்; இத்தகைய மோக்ஷம் கிட்ட இயற்றும் செயல்களுக்குத் தேவையான பொருள்; இத்தகைய மோக்ஷம் என்பதற்கு உறுப்பாக உள்ள கர்மங்கள் என்னும் தர்மம்; சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டபடி உள்ள காமம் – இப்படிப்பட்ட நான்கையே புருஷார்த்தம் என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். இந்த நான்கிலும் எம்பெருமானிடத்தில் கொள்ளும் காமம் என்பதே மிகவும் உயர்ந்த, முதன்மையான புருஷார்த்தம் ஆகும். அவனுடைய திருமுகம் நமது கைங்கர்யம் கண்டு மகிழ்வதற்கு அடிப்படையாக உள்ள நமது கர்மங்களே புருஷார்த்தம் ஆகும். ஆக க்ருஷ்ண காமமே ப்ரதானமாக நம்மிடம் இருக்க வேண்டும். மற்ற மூன்று புருஷார்த்தங்களாகிய அறம் (தர்மம்), பொருள் (தனம்) மற்றும் வீடு (தர்மம் மற்றும் தனம் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம்) ஆகிய மூன்றும் க்ருஷ்ண காமத்திற்கு அடிமைகளே என்று உரைத்தார் – யார்? வாமனனாக வந்து வசிஷ்டர் போன்ற உயர்ந்தவர்கள் தொடங்கி சண்டாளர்கள் வரை உள்ள அத்தனை மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றின் தலைகளில், வேறுபாடு காணாமல், தனது திருவடிகளை வைத்து அருளிய த்ரிவிக்ரமன் போன்று – இந்த உலகத்தாரில் ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் உபதேசித்த எம்பெருமானார் ஆவார்.

English Translation

Ramanuja who took a vow of confidence gave this counsel to the world; The fourfold pursuits of life are principled living, acquisition of wealth, fulfilment of desire, and freedom from rebirth. Of these, desire must be cultivated solely for attaining Krishna, while the other three must subserve this purpose.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்