விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடையார்  கமலத்து அலர்மகள் கேள்வன்*  கையாழியென்னும்- 
  படையோடு   நாந்தகமும் படர் தண்டும்,*  ஒண் சார்ங்கவில்லும்- 
  புடையார்   புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு*  என்று- 
  இடையே*  இராமானுச முனியாயின  இந்நிலத்தே   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன் - தளங்கள் நெருங்கிய தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வில்லபனான எம்பெருமானுடைய;
கை ஆழி என்னும் படையோடு - திருக்கையிலே (விளங்கா நின்ற திருவாழியென்கிற திவ்யாயுதத்தோடே;
நாந்தகமும் - நந்தகவாளும்;
படர் தண்டும் - ரக்ஷணத்தொழிலிலே பரந்திராநின்ழ கதையும்;
ஒண் சார்ங்கம் வில்லும் - அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும்;
 

விளக்க உரை

உரை:1

ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோகரக்ஷணுர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலேவந்து குடி கொண்டனர் என்கிறார் இப்பாட்டில். “அடையார் + புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின” என்று அந்வயித்தவாறு. ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள் இவர்ப்பக்கலிலே ஆகையாவது - இவருடைய நினைவைக் கடாக்ஷித்து நின்று இவர் அதிகரித்த காரியத்திற்குத் துணைசெய்கையாம். அமபரீஷனாக்குத் திருவாழியாழ்வான் ஸஹகரித்தது போல. இப்பாட்டை மற்றொரு வகையாகவும் அந்வயிக்க இடமுண்டு:- அடையார் +புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின” என்று இப்பக்ஷத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந்நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து திருவவதாரித் தார்க ளென்றதாகிறது. இப்பாட்டினால், எம்பெருமானார் பஞ்சாயுதாழ்வார்களுடைய திருவவதாரமென்று விளங்கா நன்றமையால் திருவனந்தாழ்வானாடைய அவதாரமென்று சொல்வது எங்ஙனே? என்று சங்கிக்கு மவர்கள் நமது சேஷாவதாரச்

உரை:2

அழகு, நறுமணம், குளிர்ச்சி ஆகிய தன்மைகள் மிகுதியாகவும் இலைகள் நெருங்கவும் உள்ளது தாமரை மலராகும். இந்தத் தாமரை மலரின் பரிமளம் என்பது ஒரு வடிவு கொண்டதோ என்று கூறும்படி, இதில் அவதரித்தவள் பெரியபிராட்டி ஆவாள். இவள் விரும்பும் நாதனாக, இவனை மட்டுமே விரும்பும் நாயகனாக வாஸுதேவன் உள்ளான். அடியார்களுக்கு ஏற்படும் துன்பம் கலைய, கஜேந்திரனைக் காத்தது போன்று துயர் நீக்கத் தனது கையில் எப்போதும் சக்கரத்தாழ்வானை வைத்துள்ளான். மேலும் நந்தகம் என்ற வாள், சார்ங்கம் என்ற வில், ஞானத்திற்கு இடமாகிய பாஞ்சஜன்யம் என்ற வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தனது கைகளில் கொண்டுள்ளான். இந்த ஆயுதங்கள் அனைத்தும், இந்த “இருள் தருமாஞாலத்தை” காப்பாற்றுவதற்காக, இந்த உலகிற்கு வந்து, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள எம்பெருமானாருக்குத் துணையாக நிற்கின்றன. அல்லது, இவையே எம்பெருமானாராக அவதரித்துள்ளன என்றும் கூறலாம்

English Translation

The Lord of lotus-dame Lakshmi wields the discus sudarsana, the dagger Nandaki, the mace kaumodaki, the bow sarnga, and the dextral conch Panchajanya. To protect the good, they have come into this world in the form of a Muni called Ramanuja.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்