விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,*  நல்ல- 
    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்*  செறுகலியால்- 
    வருந்திய ஞாலத்தை*  வண்மையினால்  வந்தெடுத்தளித்த- 
    அருந்தவன்*  எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எங்கள் - எமக்கு ஸ்வாமியுமான;
இராமாநுசனை - எம்பெருமானாரை;
அடைபவர்க்கு - ஆச்ரயிக்கு மவர்களுக்கு;
பொருந்திய தேசும் - ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்;
பொறையும் - க்ஷமாகுணமும்;

விளக்க உரை

இருள் தரு மாஞாலம் என்றபடி, கலியின் பிடியில் சிக்கி, துக்கப்பட்டபடி உள்ள இந்தப் பூமியைக் காப்பாற்ற, தனது கருணை காரணமாகப் பரமபதத்தில் இருந்து இறங்கி எம்பெருமானார் வந்தார். திருக்கோட்டியூர் நம்பி தனக்கு அளித்த சரமச்லோகத்தின் (இது ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள பதினெட்டாவது அத்தியாயம், 66 ஆவது ச்லோகம்) பொருளை, எந்தவித பயனும் எதிர்பாராமல், உலகம் அனைத்திற்கும் அளித்தார். ஸ்ரீரங்கநாயகியை முன்னே நிறுத்தி, ஸ்ரீரங்கத்தின் நாதனான அழகிய மணவாளனின் திருவடிகளில் சரணாகதி செய்தார். இவ்விதம் சரணாகதி என்ற தவம் உடைய, எங்கள் ஸ்வாமியான, எம்பெருமானாரை சரணம் புகுந்ததால் கிட்டுவது என்ன தெரியுமா? தங்கள் ஸ்வரூபத்திற்கு ஏற்ற மதிப்பைப் பெறுவார்கள். பௌத்தர்கள், யாதவப்ரகாசன், யஜ்ஞமூர்த்தி போன்றவர்கள் பெற்றிருந்த போலியான மதிப்பு போன்று அல்லாமல், உண்மையான மதிப்பு என்று கருத்து. மிகுந்த பொறுமையைப் பெறுவார்கள். பகவானுக்கும் அவனது அடியார்களுக்கும் இடைவிடாமல் கைங்கர்யம் செய்யும் பலன் பெறுவார்கள். சரியான முறையில் பெறப்பட்ட உயர்ந்த ஞானம் பெறுவார்கள். இவை அனைத்தையும் நாம் நாடிப் போகவேண்டுமா? அவசியம் இல்லை, பெரியபிராட்டியின் கடாக்ஷம் மூலம் ஓடிவரும் செல்வம் போன்று, இவை தாமாகவே நம்மிடம் ஓடி வந்து சேர்ந்துவிடும்

English Translation

By the strength of his penance, our Ramanajua lifted and protected the world from the destructive power of Kali. For those who attain him, the radiance of knowledge, proper understanding, tolerance, ability, fame, wealth, -all these will come of their own accord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்