விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன்பம் தருபெருவீடு வந்து எய்திலென்?*  எண்ணிறந்த- 
  துன்பம் தரு நிரயம்பல சூழிலென்?*  தொல்லுலகில்- 
  மன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த* 
  அன்பன் அனகன்*  இராமானுசன் என்னை ஆண்டனனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்பன் - பரமகாருணிகராய்;
அனகன் - நிர்த்தோஷரான;
இராமாநுசன் - எம்பெருமானார்;
என்னை ஆண்டனன் - என்னை அடிமைகொண்டருளினார்;(ஆனபின்பு)
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் - ஆநந்தாவஹமான மோக்ஷம்வந்து ஹித்தித்தாலெனன?;

விளக்க உரை

மிகவும் பழைமையான இந்த உலகத்தில், அறியாமை மற்றும் பூர்வ கர்ம வாசனை ஆகியவற்றின் காரணமாக ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற ஆத்மாக்களின் எஜமானன்; த்ரிவிக்ரமனாக உலகம் அளந்து, நரஸிம்ஹமாக விரைவாக வந்து, ஜடாயு என்ற பறவையின் ஈமச் சடங்குகள் செய்து, குரங்குகளின் உதவியைக் கொண்டே இலங்கைக்குப் பாலம் அமைத்து, கோவர்த்தன மலையைக் கையில் எடுத்து – இவ்விதம் பல வியப்பான செயல்களைச் செய்யும் மாயன் – இவனே ஸர்வேச்வரன என்று எம்பெருமானார் உறுதிபட மொழிந்தார். அவர் ஸ்ரீபாஷ்யத்தின் மூலம் இவனே ஸர்வேச்வரன் என்று நிரூபித்து, உலகம் முழுமையும் உணரும்படிச் செய்தார். அனைவரிடமும் அன்பு பூண்டபடி உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானார், எதற்கும் உரிமை இல்லாத என்னைத் தத்து எடுத்து, என்னை ஆட்கொண்டார். இப்படிப்பட்ட உயர்ந்த புருஷார்த்தம் கிட்டிய பின் என் நிலை என்ன? எல்லையற்ற இன்பம் அளிக்கவல்லதும், மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்று கூறப்படுவதும் ஆகிய மோக்ஷம் கிட்டினாலும் என்ன; எண்ணற்ற துன்பம் அளிக்கவல்லதான நரகம் வந்து சூழ்ந்தாலும் என்ன – இவற்றை நான் ஒன்றாகவே நினைத்து, வருந்தாமல் உள்ளேன்.

English Translation

Ramanuja, the faultiess one, the friend, discoursed that the wonder-Lord Krishna is the Lord of all beings in the Universe. He became my heart's master, Now, how does it matter whether I enjoy the pleasures of heaven or suffer the pains of hell?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்