விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆண்டுகள் நாள் திங்களாய்*  நிகழ்காலம் எல்லாம் மனமே!-
    ஈண்டு*  பல்யோனிகள்  தோறும்  உழல்வோம்*  இன்றோர்   எண்ணின்றியே‍‍‍‍‍-
    காண்தகு தோவ‌ண்ணல் தென்ன‌த்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்
    பூண்டன்பாளன்*  இராமானுசனைப் பொருந்தினமே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனமே - நெஞ்சே;
நூள் ஆய் - நாள்களாகவும்;
திங்கள் ஆய் - மாதங்களாகவும்;
ஆண்டுகள் ஆய் - வருஷ்ங்களாகவும்;
நிகழ்காலம் எல்லாம் - நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்;

விளக்க உரை

ஸம்ஸாரபந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டின் தன்மைகளையும் அறியும் மனமே! பல ஆண்டுகள், பல மாதங்கள், பல நாட்கள் என்றுள்ள காலங்கள் முழுவதிலும் – தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்று பலவாகப் பிறந்தும், இறந்தும் உழல்கின்றோம். இவ்விதம் இன்று வரை நான் எம்பெருமானாரின் திருவடிகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்று நடந்தது என்ன? காண்பதற்கு ஏற்ற அகன்ற தோள்களை உடையவனும், நாம் சரணம் புக ஏற்ற எஜமானன் போன்றவனும், “நகரேஷு காஞ்சி” எனப்படும் காஞ்சீபுரத்தில் தானே வந்து ஹஸ்திகிரியில் நின்றவனும் ஆகிய பேரருளானனின் அழகான பொருந்திய திருவடிகளைத் தனது தலைக்கு ஆபரணமாகப் பூண்டு, அவன் மீது இடைவி்டாது பக்தி கொண்டவர் எம்பெருமானார் ஆவார். இத்தகைய எம்பெருமானாரிடம் சென்று – உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே – என்று கூறும்படி பொருந்தி நின்றேன்

English Translation

O Heart! For so many days, months, yeas and ages without end. we have gone through so many births in so many wombs. Today, without a second thought, we have fallen at the feet of Ramanuja who's heart is filled with love for the benevolent-arms-Varadaraja, lord of Attigiri.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்