விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,*  அதனால்- 
  எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,*  இன்று   க‌ண்டுயர்ந்தேன்- 
  பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்* 
  கைத்த மெய்ஞ்ஞானத்து*  இராமானுசன் என்னும் கார்தன்னையே   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எய்த்து ஒழிந்தேன் - மிக்க பரிதாப மடைந்தேன்;
பொய்தவம் போற்றும் புலைச் சமயங்கள் - கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்;
நிலத்து அவிய - இந்நிலவுலகத்திலே வோற்றொழியும்படி;
கைத்த - நிரஸித்தருளின;
மெய் ஞானத்து - உண்மைஞான முடையரான;
 

விளக்க உரை

தண்டகாரண்யத்தில் இராமனை கரன் போன்ற பதினான்காயிரம் அசுரர்கள் சூழ்ந்து நின்றது போன்று, பலஆண்டுகளாக என்னால் இயற்றப்பட்ட பாவங்கள் அனைத்தும், எனது ஆத்மாவைச் சூழ்ந்தபடி உள்ளன. இந்தப் பாவங்கள் அனைத்தும் மிகவும் கொடுமையான தீயவினை காரணமாக தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல விதமான உருவங்கள் எடுத்து; அந்தச் சரீரங்களில் மேலும் பாவங்கள் செய்து; கிழட்டுத்தன்மை ஏற்பட மடிந்து போனேன். இது போன்ற பிறப்பு- இறப்பு சுழற்சி எத்தனை காலமாக உள்ளது என்றால், பல காலமாகத் தொடங்கி இன்றளவும் உள்ளது. இப்போது நடந்தது என்ன? சாஸ்திரங்களுக்கு மீறிய தவம், இராவணன் போன்று போலியான ஸந்ந்யாஸம் போன்றவற்றை ஆதரிக்கும் சைவம், மாயாவாதம், காணாபத்யம், பௌத்தம் போன்ற சமயங்கள் அனைத்தும் எரிந்து பஸ்மம் ஆயின. எப்படி என்றால் – எம்பெருமானார் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவை மூலம் தீயில் இட்ட பிணம் போல் ஆயின. இப்படிப்பட்ட மெய்ஞானம் உள்ள எம்பெருமானார் – காகாசுரன் என்ற அசுரனுக்கு இராமன் உதவியது போன்றும், தானாகவே வந்து மழை பொழியும் மேகம் போன்றும் எனக்குத் தன்னைக் காட்டிக் கொண்டார். இதனால் நான் உயர்ந்துவிட்டேன்.

English Translation

Those were days when, by the terrible deeds of sin committed, I took countless births, aged and tired. Now I have seen Ramanuja, pleasing like the dark cloud, and am saved, for the weeds out the lowly paths of false penance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்