விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காரேய் கருணை இராமானுச,*  இக் கடலிடத்தில்- 
    ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை*   அல்லலுக்கு- 
    நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின்*  உன்- 
    சீரே உயிர்க்குயிராய்,*  அடியேற்கு இன்று தித்திக்குமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை - இப்படிப்பட்ட அடியேனை;
நீ வந்து உற்றபின் - ஸ்வீகரித் தருளின பின்பு;
உன் சீரே - தேவரீருடைய கல்யாண குணங்களே;
உயிர்க்கு உயிர் ஆய் - ஆத்மாவுக்கு தாரகமாய்;
அடியேற்கு - அடியேனுக்கு;

விளக்க உரை

மேகம் போன்று பலன் எதிர்பாராமல் அநைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட எம்பெருமானாரே! உம்முடைய கருணையின் அளவை, கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ள யார்தான் முற்றிலுமாக அறிவார்கள்? ஆனால் நான் இதனை உணர்ந்துவிட்டேன். எப்படி? அனைத்து விதமான துக்கங்களுக்கு இருப்பிடமாக, அவை தங்கும் பூமியாக நான் இருந்தேன். கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட பரம்பொருள், பரமபதத்தில் இருந்து ஓடி வந்தது போன்று, எனது துன்பங்கள் கண்ட நீவிர் இந்த உலகில் அவதரித்தீர். இவ்விதமாக என்னை நீ வந்து ஆட்கொண்ட பின்னர் எனக்கு நேர்ந்தது என்ன? இந்த உலகில் உள்ள அனைவருக்கும் அவரவர்களின் ப்ராணனே உயிர் தரிக்க ஏதுவாக உள்ளது. ஆனால் எனக்கு உனது ப்ராணனே ப்ராணனாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த உமது திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் தேன், பால், பாயஸம் போன்று எனக்கு மிகவும் உள்ளது.

English Translation

O Ramanuja, Benevolent as the dark cloud! Who in this wide world can understand the nature of your grace? I was the very hotbed of sin. On your own, you came and accepted me, Today your noble qualities are sweet as ambrosia to my lowly self's soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்